எழுத்துரு அளவு Larger Font Smaller Font


கொழும்பு, ஏப். 10- இலங்கை வடக்கு மாகாண முதல்வர் பத விக்கு சி.வி.விக்னேஸ்வரனை முன்னிறுத்தவோ, ஆதரிக்கவோ மாட்டோம் என்று தமிழ் தேசி யக் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது. அந்த அமைப்பின் தலைவர்களுக்கும், விக்னேஸ் வரனுக்கும் இடையே நிலவி வரும் கருத்து மோதல்களே இதற்குக் காரணம் எனக் கூறப் படுகிறது.

கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை வடக்கு மாகாண தேர்தலில் தமிழ் தேசி யக் கூட்டமைப்பின் சார்பில் விக்னேஸ்வரன் முதல்வர் வேட் பாளராக முன்னிறுத்தப்பட் டார். அதிக வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்ற அவர் மாகாணத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றார்.

அதன் பின்னர், கூட்டமைப் பின் முக்கியத் தலைவர்கள் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா தலைமையிலான அரசுக்கு பல்வேறு விவகாரங் களில் ஆதரவு தெரிவிக்கத் தொடங்கினர். மேலும், சிங்கள ஆட்சியாளர்களுடன் மென்மை யான போக்கையும் அவர்கள் கடைப்பிடித்தனர்.

தமிழ் தேசியக் கூட்ட மைப்பு தலைவர்களின் இந்த நடவடிக்கைக்கு அதிருப்தி வெளிப் படுத்திய விக்னேஸ்வரன், அவர்களுடன் கருத்து வேறு பாடு கொண்டார். இந்தச் சூழ லில், நிகழாண்டு இறுதியில் நடைபெறவுள்ள இலங்கை மாகாணத் தேர்தலில் விக்னேஸ் வரன் மீண்டும் முதல்வர் வேட் பாளராக முன்னிறுத்தப்படு வாரா? எனக் கேள்வி எழுப் பப்பட்டது.

அதற்கு பதிலளித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி. சுமந்திரன், ‘விக்னேஸ் வரனை மீண்டும் ஆதரிக்கும் திட்டம் இல்லை’ என்றார். இதனிடையே, கூட்டமைப்பின் முதல்வர் வேட்பாளாராக மாவை சேனாதிராஜா முன்னிறுத்தப்ப டலாம் எனத் தகவல்கள் வெளி யாகியுள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner