எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சென்னை, ஏப்.16 தனியார் உற்பத்தி செய்யும் ஒரு யூனிட் காற்றாலை மின்சாரத்தை

ரூ.2.86-க்கு மின்சார வாரியம் கொள்முதல் செய்து கொள்ள தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள் ளது.

தென் மாவட்டங்களில் 2000 மேற்பட்ட தனியார் நிறுவனங் களால் சுமார் 8,000 மெகாவாட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் மாத இறுதியிலிருந்து செப்டம்பர் வரை காற்று அதிகமாக வீசும் என்பதால் காற்றாலை மின் உற் பத்தி செய்ய உகந்த காலமாகும்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் தேவைக்கேற்ப ஒப்பந்தப்புள்ளி மூலம் வாங்கப் படுகிறது. இதன்படி கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் முறைப்படி டெண்டர் விடப்பட்டது. இதில் ஒரு யூனிட் அதிகபட்சமாக ரூ.2.86 விலையில் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதாவது காற்றாலை, சர்க்கரை ஆலை, தாவரக் கழிவுகளால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறையே கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, தற்போது ஒரு யூனிட் காற்றாலை மின்சாரத்தின் விலை ரூ.2.86 ஆக நிர்ணயிக்கப்படுகிறது.

இந்தக் கட்டணம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அதாவது 2020-ஆம் ஆண்டுவரை நடைமுறையில் இருக்கும். சென்ற ஆண்டு இதன் விலை ரூ.4.16 என்ற அளவில் இருந்தது.

இந்நிலையில் இந்த புதியக் கட்டண விவரத்தை மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணை யம் வெள்ளிக்கிழமை (ஏப்.13) அன்று தனது இணைய தளத்தில் வெளியிட்டது.

அதன்படி ஒரு யூனிட் காற்றாலை மின்சாரம் ரூ.2.86-க்கு மின்சார வாரியம் கொள்முதல் செய்து கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.

இதனிடையே கோடைக்கால தேவையைக் கருத்தில் கொண்டு, காற்றாலை மற்றும் சூரியசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 3,000 மெகாவாட் அளவுக்கு கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளதாக மின்சார வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner