எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மே 16- அம்பேத்கரின் 127ஆ-வது பிறந்த நாளையொட்டி விடுதலை சிறுத் தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கும் விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நேற்று (15.5.2018) நடந்தது. கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி னார். துணைப் பொது செயலாளர்கள் வன்னி அரசு, எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ் முன்னிலை வகித்தனர்.

அம்பேத்கர் சுடர் விருது கேரள முதல்- அமைச்சர் பினராயி விஜயனுக்கு அறிவிக் கப்பட்டு இருந்தது. அதை கேரள அமைச் சர் கடகம் பள்ளி சுரேந்திரன் பெற்றுக் கொண்டார். காமராஜர் கதிர் விருது தமிழக காங்கிரசு தலைவர் சு.திருநாவுக்கரசருக்கும், பெரியார் ஒளி விருது ஆந்திராவை சேர்ந்த கத்தாருக்கும், காயிதே மில்லத் பிறை விருது வைகறை வெளிச்சம் ஆசிரியர் மு.குலாம் முகமதுவுக்கும், செம்மொழி ஞாயிறு விருது வா.மு.சேதுராமனுக்கும் வழங்கப்பட்டது. அயோத்திதாசர் ஆதவன் விருது இந்திய குடியரசு கட்சியை சேர்ந்த, மறைந்த அ.சேப்பனுக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. அதை அவருடைய மகன் பிரகாஷ் பெற்றுக்கொண்டார். விருதுகளு டன் செப்பு தகடில் பட்டயமும், தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையும் வழங் கப்பட்டது. விருதுகளை வழங்கி தொல்.திருமாவளவன் பேசியதாவது.

கருநாடகாவில் ஆட்சி அமைக்க போதிய இடங்களில் வெற்றி பெறவில்லை என்றாலும், பா.ஜ.க. பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி உள்ளது. மதச்சார் பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட மதச்சார்பற்ற சக்திகளை காங்கிரசு கட்சி ஒருங்கிணைக்க தவறியதே இந்த வீழ்ச்சிக்கு காரணம்.

தேர்தலுக்கு பின்னர் கூட்டணி அமைக் கும் இந்த இரு கட்சிகளும் தேர்தலுக்கு முன்னரே இந்த முயற்சியை மேற்கொண்டி ருந்தால், பா.ஜ.க.வை அதிக இடங்களில் வெற்றி பெறவிடாமல் தடுத்திருக்க முடி யும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதச் சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைப்பதில் காங்கிரசு கட்சி முயற்சி எடுக்க தவறினால் கர்நாடகா நிலைமைதான் ஏற்படும்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைப் பதில் காங்கிரசு கட்சி அக்கறை காட்ட வில்லை. அதனால் தான் பா.ஜ.க. மத்தி யில் ஆட்சியை கைப்பற்றியது. மீண்டும் மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்தால் ஜன நாயகத்தையும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் காப்பாற்ற முடியாது.

எனவே தேசம் காப்போம் என்ற தலைப்பில் ஜூலை அல்லது ஆகஸ்டு மாதத்தில் மாநாடு நடத்த முடிவெடுத்து உள்ளோம். அந்த மாநாட்டில் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். தி.மு.க., தெலுங்குதேசம், திரிணாமுல் காங்கிரசு, தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி உள்ளிட்ட மாநில உரிமைகளுக்கு போராடும் கட்சி கள் ஒருங்கிணைந்து தேசத்தை காத்திட முன்வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன், தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளைஞர் எழுச்சி பாசறை செயலாளர் குடந்தை தமிழினி, மாவட்ட செயலாளர்கள் செல்லத்துரை, இரா.செல் வம், தமிழக காங்கிரசு பொதுச் செயலாளர் சிரஞ்சீவி, மகளிர் காங்கிரசு தலை வர் ஜான்சி ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner