எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 12- நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்து சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியின் நிர் வாக அலங்கோலங்கள் குறித்து 2016--2017ஆ-ம் ஆண்டிற்கான இந்திய தலைமை தணிக்கை கணக்காளரின் (சி.ஏ.ஜி.) அறிக் கையில் வெளிவந்துள்ள தக வல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் அக்டோபர் 2013ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 2016 வரை நிலக்கரி இறக்குமதி செய்ததில் மட்டும் 1,600 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

நிலக்கரியின் சர்வதேச விலை தொடர்ந்து குறைந்து கொண்டிருந்த நேரத்தில் விலையை அதிகரித்துப் போடுங் கள் என்று ஒப்பந்ததாரர்களை மின் பகிர்மானக் கழகமே கேட்டுக் கொண்டுள்ளது என்ற சி.ஏ.ஜி.யின் அறிக்கை பேர திர்ச்சியாக இருக்கிறது. நிலக் கரி இறக்குமதியில் நடைபெற் றுள்ள முறைகேடுகள் ஆதார பூர்வமாக இன்றைக்கு முச்சந் திக்கு வந்து நிற்கிறது. குறிப் பாக தரமில்லாத நிலக்கரியை இறக்குமதி செய்ததில் மட்டும் 607 கோடி ரூபாய் மின்வாரியத் திற்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்பதை அந்த அறிக்கை போட்டு உடைத்திருக்கிறது.

மாநில போக்குவரத்து கழ கத்திற்கு புதிய பேருந்துகளை வாங்குவதில் ஏற்பட்ட தாம தத்தால் 14.23 கோடி ரூபாய் இழப்பு என்று சி.ஏ.ஜி. அறிக் கையின் பக்கங்கள் எல்லாம் அ.தி.மு.க அரசின் நிர்வாக அலங்கோலத்தால் ஏற்பட்ட இழப்புகளின் தொகுப்பாக இருக்கிறது. ஆகவே, இந்த நஷ்டங்களை மட்டும் கூட்டிப் பார்த்தால், 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அரசு கஜா னாவை அ.தி.மு.க அரசு காலி பண்ணியிருக்கிறது என்பது 2016--2017 சி.ஏ.ஜி. அறிக்கையின் வாயிலாக தெரிகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கன அடி தண்ணீரை 21 மணி நேரங்கள் திறந்து விட்டு, சென் னையை வெள்ளக்காடாக்கி, மக்களின் உயிரையும், உடை மைகளையும் பேரிடருக்குள் ளாக்கியது குறித்து கிரிமினல் வழக்குப் பதிவு செய்து மக் களின் உயிரோடு விளையாடிய உண்மைக் குற்றவாளிகளை உல கிற்கு அடையாளம் காட்டி, தண்டிக்க வேண்டும்.

அதேபோல், தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து 1,600 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதில் உள்ள முறைகேடுகள் குறித்து சி.பி. அய். விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இல்லையென்றால் தி.மு.க. சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். இவ் வாறு அவர் கூறியுள்ளார்.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner