எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 12- உயர்நீதி மன்ற தீர்ப்பை அமல் படுத்தா மல் தமிழக மக்களை ஏமாற் றும் நடவடிக்கைகளில் மத் திய, மாநிலஅரசுகளும், சிபி எஸ்இ-யும் ஈடுபடக் கூடாது என்று டி.கே.ரங்கராஜன் எம். பி., வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் புதனன்று (ஜூலை 11) செய்தியாளர்களி டம் அவர் கூறிய தாவது: நீட் தேர்வில் தமிழக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்வார்கள் என்பதால் தான் உச்சநீதிமன் றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளோம்.

நீட் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் வரவேற்றுள்ளார். எனவே, தமிழக அரசும், முதலமைச்ச ரும் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கும், சிபிஎஸ்இ-க்கும் அதற்கான அழுத்தத்தை தர வேண்டும். ஏற்கெனவே கலந்தாய்வு முடிந்து மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு இடையூறு இல்லாமல், புதிதாக சேர்க்கைக் கான இடங்களை அதிகப்படுத்த வேண்டும். இத்தகைய அசாதா ரணமான சூழலை உருவாக்கிய வர்கள் அதனை சரி செய்வதற் கான வழிமுறைகளை கண்டு பிடிக்க வேண்டும். அரசு மற் றும் தனியார் கல்லூரிகளில் கூடுதலாக இடங்களை ஏற் படுத்த முடியும்.

பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிட மாணவர்களுக்கு தனியார் கல்லூரியில் இடம் ஒதுக்கும் பட்சத்தில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே அவர்கள் செலுத்த அனுமதிக்கவேண்டும். பிரச்சினைக்கு சிபிஎஸ்இ தான் காரணம் என்பதால் மீதமுள்ள தொகையை அது செலுத்த வேண்டும். சுமூகமாக இதை அமல்படுத்தினால் 24 ஆயிரம் மாணவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும். நீதிமன்றம் 15 நாட்கள் கால அவகாசம் கொடுத்திருந்தாலும், அதுவரை காத்திராமல் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner