எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

சென்னை, ஜூலை 12 கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும் வரும் 16ஆம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப் படவுள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு கடந்த மே 15 ஆம் தேதி கல்வித் துறை இணையதளத்திலும், மே 17 ஆம் தேதி அன்று அவரவர் பள்ளியிலும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதுதொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய அனைத்து மாணவர் களுக்கும் ஜூலை 16 ஆம் தேதி காலை 10 மணி முதல் அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

தனித் தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய மய்யத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்‘ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதியியல் கல்வியறிவிற்காக பயிற்சி பள்ளி

மும்பை, ஜூலை 12  நிதியியல் திட்டங்கள் பிரிவில் இந்தி யாவின் ஒரே மின்- வர்த்தக நிறுவனமாகத் திகழும் 5 பைசா.காம் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட பயணர்களை எட்டும் வகையில், நாட்டின் மிகப்பெரிய இலவச ஆன்லைன் முதலீட்டுப் பள்ளியை அறிமுகம் செய்துள்ளது.

5பி ஸ்கூல் என்னும் இப்புதிய முன்முயற்சி, 5பைசா.காம் இணையதளம் மற்றும் 5 பைசா மொபைல் ஆப் ஆகிய இரண்டிலும் கிடைக்கப்பெறும்.

நீண்ட காலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது நல்ல ரிட்டர்ன்களை வழங்கும் என்பது அனைவருக்கும் தெரியும். மியூச்சுவல் ஃபண்ட்கள் வழியாகவும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். எனினும், மிக முக்கியமான கேள்வி எந்த பங்கில் மற்றும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே ஆகும்.

எனவே முக்கியமான முதலீட்டுக் கொள்கைகள் குறித்து இளைஞர்களுக்கு பயிற்சியளிக்கவும் மற்றும் அவர்களது பணத்தை வேகமாக வளர்க்கும் வகையில் சந்தையில் கிடைக்கப் பெறும் பல்வேறு பிற திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் வகையிலும் இது உருவாக்கப் பட்டுள்ளது என்று  இந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பிரகாஷ் கடோனி தெரிவித்துள்ளார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner