எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுவை முதல்வர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி, ஜூலை 28 முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று (27.7.2018) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறிய தாவது:-

நடந்த முடிந்த சட்டசபை கூட்டத் தொடரில் புதுவைக்கு மாநில தகுதி வழங்க கோரி சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத் துடன் என்.ஆர். காங்கிரசு எம்.எல்.ஏ.க்கள் தவிர அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் டில்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து புதுவைக்கு மாநிலத் தகுதி வழங்கும்படி வலியுறுத் தினோம்.

அதுபோல் துணை குடியரசுத் தலைவர் உள்பட அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து இது தொடர்பாக பேசினோம். அவர்கள் அனைவரும் புது வைக்கு மாநிலத் தகுதி பெற்று தருவதாக உறுதி அளித்தனர்.

டில்லி பயணம் வெற்றி என கூற முடியாவிட்டாலும் திருப்தி கரமாக அமைந்தது. மாநில தகுதியைப் பெற்றால் மட்டுமே வெற்றி என்று கூற முடியும்.

புதுச்சேரியில் 4 பிராந்தி யங்களான புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகியவற்றை ஒருங் கிணைத்துதான் மாநில தகுதியை கேட்டுள்ளோம். இதில், எந்தவொரு பிராந்தியத் தையும் மற்றொரு மாநிலத்துடன் சேர்த்து மாநிலத் தகுதி அளித்தால் அதனை ஏற்க மாட்டோம்.

புதுவைக்கு மத்திய அரசு போதிய நிதி அளிக்காததாலும் மத்திய நிதி கமிஷனில் புதுவை சேர்க்கப்படாததாலும் புதுவை மாநில நிதி ஆதாரம் மிக மோசமான நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவரிடம் மாநிலத் தகுதி பற்றி ஆளுநர் கிரண்பேடி கூறிய கருத்து குறித்து நாராய ணசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

அவரவர்கள் தங்களது அதிகாரத்துக்குட்பட்டு செயல்பட வேண்டும். ஆளுநர் கிரண்பேடி என்ன அரசியல்வாதியா? மாநில மக்களின் விருப்பத்தை டில்லி யில் கூறி உள்ளோம்.

மாநிலத் தகுதி தேவையில்லை என கூறுவதற்கு ஆளு நருக்கு அதிகாரம் இல்லை. அவர் அரசியல்வாதி என்றால் ஆளுநர் பதவியை விலகி விட்டு அரசி யலுக்கு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner