எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி, ஜூலை 29 திருச்சி பெரியார் மருந்தியல்  கல்லூரியில் மூலிகை மருந் தியல் துறை சார்பில் பாரம்பரிய மருத் துவம் குறித்த சிறப்புக் கருத்தரங்கம் 26.07.2018 அன்று காலை 9.30 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மூலிமை மருந்தியல் துறையின் தலைவர் முனைவர் த. சிறீ விஜய கிருபா அவர்கள் வரவேற்புரை யாற்றினார். பெரியார் மருந்தியல் கல்லூரி யின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை அவர்கள் தமது தலைமையுரையில் அதிவேக வாழ்க்கை முறை, துரித உணவு களின் பயன்பாடு, உடலுழைப்பின்மை போன்ற காரணங்களால் இதய நோய், புற்றுநோய், நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்களின் பெருக்கம் அதிகரிப்பதாகவும், பாரம்பரிய வாழ்க்கை முறையில் நமது முன்னோர்கள் பின்பற்றிய உடலுழைப்புமிக்க செயல்பாடுகள், இயற்கையோடு இணைந்த சத்தான சரிவிகித உணவு, நேர்மறை சிந்தனைகளுட னான வாழ்க்கை முறைகளை பின்பற்றி வாழ்ந்தால் நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழ முடியும் என்றும் உரையாற்றினார். மேலும் தொன்மையான தமிழ் மருத்துவம் என்பது உணவே மருந்து, மருந்தே உணவு என்பதை அடிப்படையாகக் கொண்டது என்றும் இத்தகைய மருத்துவம் பக்க விளைவு களற்ற, நிரந்தரத் தீர்வினை வழங்கக்கூடிய மருத்துவம் என்றும் உரை யாற்றினார்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் திருச்சி மாவட்ட அரசு பொது மருத்துவ மனையின் சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் எஸ். காமராஜ் அவர்கள்   பாரம்பரிய மருத்துவமே நலவாழ்விற்கான திறவுகோல் என்ற தலைப்பில் சிறப்புரை யாற்றினார். அவர் தமது உரையில், 1963இல் கரூரில் நடைபெற்ற மாநாட்டில் தந்தை பெரியார் அவர்களால் காமராஜ் என பெயர் சூட்டப்பட்ட பெரும் வாய்ப்பை பெற்ற நான் அவர் பெயர் தாங்கிய கல்லூரியில் நடைபெறும் இக்கருத்தரங்கில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைவ தாகவும், இப்பெரும் வாய்ப்பை அளித்த கல்லூரியின் நிர்வாகத்திற்கு தமது நன்றியை முதலில் தெரிவித்துக் கொண் டார்.

பாரம்பரிய மருத்துவமாகிய நம் தமிழ் மருத்துவம்தான் மற்ற மருத்துவத்திற் கெல்லாம் முன்னோடி என்றும் அத்தகைய மருத்துவம் நம்முடைய தமிழ் மக்க ளாலேயே புறக்கணிக்கப்படுவதால்தான் அதில் போதிய அளவு முன்னேற்றமும் வளர்ச்சியும் ஏற்படவில்லையென்றும் உரையாற்றினார்.

சமீபத்தில் டெங்கு நோய் பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டபொழுது நில வேம்பு குடிநீரை மக்கள் நாடியதுதான் தமிழ் மருத்துவத்தின் பக்கம் மக்களின் கவனம் மாறியிருப்பதற்கு அடையாளம் என்றும் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் என்பது நமது தமிழர்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்திய உணவுகளே ஆகும்.

இயற்கையாக கிடைக்கக்கூடிய கீரைகள்,  பழங்கள், காய்கறிகள், பயறு வகைகள், தானியங்கள் போன்றவற்றை நாம் எடுத்துக்கொள்ளும் போது உடல் ஆரோக்கியமாகவும், நோய் எதிர்ப்பு சக்தி மிக்கதாகவும் மாறுகின்றது. மேலும் இக்காலத் தலைமுறையினருக்கு உடல் சார்ந்த விளையாட்டுக்கள்  தினசரி வாழ்க்கை முறையில் கிடைக்கப்பெற வில்லை. செல்பேசி, இணையதளம், டுவிட்டர் போன்ற தொலைதொடர்பு களிலேயே பொழுதைபோக்கி ஒரு வித மன அழுத்தத்திற்கும், உடல் நோய் களுக்கும் ஆளாகின்றனர். பாரம்பரிய குடும்ப உறவுமுறைகளும் தற்போதைய வாழ்க்கை சூழலில் மாறியுள்ளதால் பெரி யோர்களும், இளைஞர்களும் தனிமைப் படுத்தப்படுவதால் நற்சிந்தனை களும், நல்ல பழக்க வழக்கங்களும் இக் காலத் தலைமுறைகளுக்கு கிடைக்கப் பெறுவ தில்லை என்றும் உரையாற்றினார்.

உலகம் வணிக ரீதியை நோக்கி செல்வதாலும், விளைவுகள் எதுவாயினும் உடனடித் தீர்வு தேவை என்பதனை விரும்புவதனாலும் தமிழ் மருத்துவத்தை மக்கள் பெரும்பாலும்   தவிர்க்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும் என்றால் மூலிகை மருந்தியல் பயிலக்கூடிய மாண வர்களாகிய நீங்கள் மூலிகைத் துறையில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு தமிழ் மருத்துவத்தின் புகழை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தின் நேரடி ஒலிபரப்பில் மருந்தியல் மாணவர்கள் மருத்துவர் காமராஜ் அவர்களுடன் கலந் துரையாடி, மூலிகைத் தொடர்பான கேள்வி களை கேட்டு பயனடைந்தனர்.  மேலும் இயற்கை மருத்துவர்கள் மரு. செல்வக் குமார், மரு. இசையமுது  ஆகியோர் மாண வர்களின் கேள்வி களுக்கு பதிலளித்தனர்.

இந்நிகழ்ச்சிகளை திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தின் இயக்குநர் நடராஜன், திருமதி தாரா மற்றும் குழுவினர் தொகுத்து வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு பேராசிரியர் முனைவர் அ.மு. இசுமாயில், துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்த இந்நிகழ்ச்சிக்கு பேராசிரியர் ப.பாலசுப்ரமணியன் அவர்கள் நன்றியுரையாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner