எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 30 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலையில் நேற்றிரவு 8 மணி அளவில் திடீரென்று பின்னடைவு ஏற்பட்டது. மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளித்ததால், அவரது உடல்நிலை மீண்டும் சீரானது. மருத்துவமனை முன்பு தொண்டர்கள் குவிந்தை அடுத்து ஆயிரக்கணக்கான காவல்துறையினரும் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்றிரவு 9.50 மணிக்கு காவிரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில் கூறியிருப்பதாவது:

முன்னாள் முதல்வரும், திமுக தலை வருமான கலைஞரின் உடல்நிலையில், தற்காலிக பின்னடைவு ஏற்பட்டது. மருத்துவக் குழுவின் தொடர் சிகிச்சையால் உடல்நிலை சீரானது. அவர் தொடர்ந்து மருத்துவக் குழுவின், கண்காணிப்பில் இருக்கிறார். மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.  ஆனாலும் மருத்துவனை முன்பு பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண் களும், இளைஞர்களும் திரண்டு வந்த வண்ணம் இருந்ததால், தொடர்ந்து பரபரப்பு நிலவியது. மக்கள் கூட்டம் அதிகமாகி கொண்டே இருந்ததால் காவல்துறையினர் அங்கு வந்து கூட்டத்தைக் கலைந்து போக செய்தனர்.  மருத்துவமனையில் இருந்து நேற்று இரவு 10.50 மணியளவில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் வீட்டுக்குச் சென்றனர்.

தொண்டர்கள் அமைதி காக்க தளபதி மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

இது குறித்து நேற்றிரவு தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை வருமாறு: நம் அனைவரின் அன்புக்குரிய திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலையில், காவேரி மருத்துவமனை அறிக்கையில் கூறியிருப்பது போல் எதிர்பாராதவிதமாக ஒரு தற்காலிக பின்னடைவு ஏற்பட்டு, மருத்துவர்களின் தீவிர சிக்கிச்சைக்குப் பிறகு தற்போது உடல் நிலை சீராகி வருகிறது. மருத்துவக் குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறது. ஆகவே தொண்டர்கள் அனைவரும் எவ்வித விரும்பத்தகாத நிகழ்விற்கும் இடம் கொடுத்து விடாமலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் அமைதி காத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினருக்கு உரிய ஒத்துழைப்பு நல்கிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கி றேன். இவ்வாறு தளபதி மு.க.ஸ்டாலின் கூறி யுள்ளார்.

முதலமைச்சர் பழனிசாமி பேட்டி

தி.மு.க. தலைவர் கலைஞரின் உடல் நலம் பற்றி விசாரிக்க முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல மைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு இன்று (30.7.2018) காலை வருகை தந்தனர். முதலமைச்சர் வருகையால் மருத்துவமனை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.  9.57 மணியளவில் மருத்துவமனைக்குள் சென்ற முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலைஞர் அவர்களை நேரில் சென்று பார்த் தனர். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து முத லமைச்சர் உட்பட அமைச்சர்கள் வெளியில் வந்தனர். மருத்துவமனை வளாகத்தில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல மைச்சர் பழனிசாமி, திமுக தலைவர் கலைஞரை, துணை முதல்வரும் தானும் நேரில் சென்று பார்த் ததாகவும், கலைஞரின் உடல் நிலை சீராக உள்ளது எனவும் தெரிவித்தார். திமுக தலைவர் கலைஞரை,  மு.க ஸ்டா லின், கனிமொழி ஆகியோருடன் சென்று பார்த்ததாகவும் முதலமைச்சர் தனது பேட்டி யின் போது தெரிவித்தார்.

கலைஞர் உடல்நலம் விசாரித்த தலைவர்கள்

நேற்று முன்னாள் (28.7.2018) இரவு சென்னை கோபாலபுரம் கலைஞர் அவர் களின் வீட்டிலிருந்து திமுக தலைவர் கலைஞர் அவர்கள் சிகிச்சைக்காக சென்னை ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காவேரி மருத்துவமனையில் (29.7.2018) குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் நேரில் கலைஞரை பார்த்தனர். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து காவேரி மருத் துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் எடுத்துரைத்தார். பின்னர், திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி, ராஜாத்தி அம்மாள் ஆகியோரிடம் கலைஞரின் உடல்நலம் குறித்து துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு விசாரித்தார்.

திமுக பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் நேற்று (29.7.2018) காலையும், இரவும் மருத்துவமனைக்கு சென்று கலைஞரின் உடல்நலம் குறித்து விசாரித்தார். திமுக மூத்த பொறுப்பாளர்கள் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி சிவா மற்றும் திமுக எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் பலர் மருத்துவமனையில் திரண்டிருந்தார்கள்.

காங்கிரசு கட்சி மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சு.திருநாவுக்கரசர், ஈ.வெ.கி.ச.இளங்கோவன், நக்கீரன்  ஆசி ரியர் கோபால் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தலைவர்கள் கோபாலபுரம் வீட்டிலும், காவேரி மருத்துவமனையிலும் கலைஞர் அவர்களின் உடல்நலன்குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர்கனிமொழி ஆகியோரிடம் விசாரித்தார்கள்.

மதிமுகபொதுச்செயலாளர்வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலா ளர் சீதாராம் யெச்சூரி, மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் து.ராஜா, மாநில செயலாளர் இரா.முத்தரசன், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன், தமிழக சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபால், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங் களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், இனமுரசு சத்யராஜ்  பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.முரளி தரராவ், இல.கணேசன், பாமக தலைவர் ராமதாஸ், தமிழக பாஜக தலைவர் தமி ழிசை சவுந்தரராஜன், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், புதுச் சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி உள் ளிட்ட தலைவர்கள் பலரும் காவேரி மருத் துவமனையில் மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோரை நேற்று சந்தித்து கலைஞரின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner