எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

அமராவதி, ஜூலை 30- ஆந்திரப் பிரதேசத்துக்கு சிறப்புத்

தகுதி வழங்காததற்காக பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு அந்த மாநில முதல்வர் சந்திரபாபு மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளார் ஓங்கோல் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பங்கேற்று அவர் மேலும் கூறியதாவது:

தெலுங்கு தேசம் கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வந்தது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வலையில் நாங்கள் சிக்கவில்லை. ஒரே பாதையில்தான் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம்.

ஆந்திரத்துக்கு சிறப்புத்  தகுதி அளிக்கிறோம் என்று கூறிவிட்டு வாக்கு தவறியது பாஜகதான். மக்களவையில் கடந்த 20-ஆம் தேதி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர் மானத்துக்கு ஆதரவளித்ததற்கு எதிர்க்கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் கேட்காமலே நிபந்தனையற்ற ஆதரவு நல்கிய காங்கிரஸ் கட் சிக்கும் மனமார்ந்த நன்றி. சமாஜ் வாதி, திரிணமூல் காங்கிரஸ், அய்க்கிய ஜனதா தளம், திமுக, ராஷ்ட்ரீய ஜனதா தளம், இந் திய கம்யூனிஸ்ட், சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், அகாலி தளம், கேரள காங்கிரஸ், மக் கள் ஜனநாயகக் கட்சி, தெலங் கானா ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கின. பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு நாம் நடுக்கத்தை ஏற்படுத்தி விட் டோம் என்றார் சந்திரபாபு நாயுடு.

பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நாடா ளுமன்றத்தில் கொண்டுவரப் பட்ட நம்பிக்கையில்லாத் தீர் மானத்துக்கு ஆதரவாக 126 எம்.பி.க்களும், 325 எம்.பி.க்கள் எதிராகவும் வாக்களித்தனர். இந்தத் தீர்மானத்துக்கு எதிராக அதிமுக எம்.பி.க்கள் வாக்களித் தனர். சிவசேனை, பிஜு ஜனதா தளம், தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகளின் எம். பி.க்கள் வாக்கெடுப்பில் பங் கேற்கவில்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner