எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 30 தமிழகத்தின் ஒட்டுமொத்த உயர் கல்வி சேர்க்கை விகிதம் (ஜி.இ.ஆர்.) கடந்த கல்வியாண் டைக் காட்டிலும் நடப்பாண்டு 1.7 சதவீதம் அதிகரித்து 48.6 சதவீதம் என்ற நிலையை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு (2016--17) தமிழகத்தின் ஜி.இ.ஆர். 46.9 சதவீதமாக இருந்தது.

அகில இந்திய உயர் கல்வி சர்வே (ஆயிஷா) புள்ளி விவரத் தின் அடிப்படையில் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது. இதில் 56.4 ஜி.இ.ஆர். புள்ளி களுடன் சண்டிகர் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத் தில் தமிழகமும், 46.3 புள்ளி களுடன் டில்லி மூன்றாம் இடத் திலும் உள்ளன.

நாட்டில் உயர் கல்வியை மேம்படுத்தும் வகையிலும், உயர் கல்வியின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ளும் வகையிலும் கடந்த 2011-ஆம் ஆண்டு ஆயிஷா சர்வே அறி முகப்படுத்தப்பட்டு, புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இப்போது 2017- - 2018 கல்வியாண்டுக்கான புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாடு முழுவதிலுமிருந்து 882 பல்கலைக்கழகங்களும், 38,061 கல்லூரிகளும், ஒரு படிப்பை மட்டும் நடத்தும் 9,090 ஸ்டேன்ட் அலோன் கல்வி நிறுவனங்களும் பங்கேற்றன.

இந்தப் புள்ளி விவரங் களின்படி, தமிழகத்தின் ஒட்டு மொத்த உயர் கல்வி சேர்க்கை விகிதம் (18 முதல் 23 வயது வரை உடைய மாணவர்கள்) கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகரித்தி ருப்பது தெரிய வந்திருக்கிறது.

இதில் சண்டிகர், தமிழகம், டில்லி, புதுச்சேரி (45.4), இமாச்சல பிரதேசம் (37.9), உத்தரகண்ட் (36.3), கேரளம் (36.2) ஆகிய மாநி லங்கள் அடுத்தடுத்த இடங் களைப் பிடித்துள்ளன.

பெண்கள் ஒட்டுமொத்த உயர் கல்வி சேர்க்கையிலும் 48.2 புள்ளிகளுடன் தமிழகம் இரண் டாமிடம் பிடித்துள்ளது. இதிலும் 67.7 சதவீதத்துடன் சண்டிகர் முத லிடம் பிடித்துள்ளது.

புதுச்சேரி (48.1),. டில்லி (48), இமாச்சலப் பிரதேசம் (42.2), சிக் கிம் (41.1), கேரளம் (40.4) அடுத்தடுத்து இடங்களைப் பிடித் துள்ளன.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner