எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 30 முழு வதும் உள்நாட்டிலேயே உருவாக் கப்பட்ட முதல் காற்று சுத்தி கரிப்பான் கருவி, சென்னை அய் அய்டி-யில் வடிவமைக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை அய்அய்டி ஆராய்ச் சிப் பூங்காவில் இடம்பெற்றுள்ள ஏர்.ஓ.கே என்ற நிறுவனம் விஸ்டர் 550’ என்ற காற்று சுத்தி கரிப்பான் கருவியை வடிமைத் துள்ளது. இது காற்றிலுள்ள துகள்கள், மைக்ரான்கள், கிரு மிகள் போன்ற கண்ணுக்குத் தெரி யாத பொருள்களை மட்டுமின்றி நச்சுக் காற்றையும் வடிகட்டி சுத்தமான காற்றை தரக்கூடிய திறன் கொண்டதாகும். ஒரு கருவி 550 சதுர அடி பரப்பளவில் உள்ள காற்றை சுத்திகரிக்கும் திறன் கொண்டதாகும். மேலும், இந்த சுத்திகரிப்பானில் இடம் பெற்றுள்ள காற்று வடிகட்டிகள் ஓராண்டு செயல்படும் திறன் கொண்டதாகும். ஆனால், தற் போது பயன்பாட்டில் உள்ள பிற சுத்திகரிப்பான்களில் இடம்பெற்றிருக்கும் காற்று வடி கட்டிகள் ஆறு மாதங்கள் மட்டுமே வாழ்நாள் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. சென் னை அய்அய்டி-யில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சென் னை அய்அய்டி ஆராய்ச்சிப் பூங்கா பேராசிரியர் அசோக் ஜுன் ஜுன்வாலா, காற்று சுத்திகரிப் பானை அறிமுகம் செய்தார்.

அப்போது அவர் பேசும் போது, காற்று மாசு அதிகரித்து வரும் இந்தச் சூழலில், அதன் தாக்கத்தை ஓரளவுக்குக் குறைக்க உதவும் வகையிலான கருவியை ஏர்.ஓ.கே நிறுவனம் வடிவமைத்தி ருப்பது வரவேற்கத்தக்கது. இக் கருவியின் விலை ரூ. 20 ஆயிரம் என்ற அளவில் நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது’ என்றார் அவர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner