எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திமுக செயல்தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் பேட்டி!

சென்னை, ஜூலை  31  திமுக தலைவர் கலைஞர் அவர்களுக்கு,  மருத்துவ நிபுணர்கள், தொடர்  கண்காணிப்பில் தகுந்த சிகிச்சை அளித்து வருகின்றனர் என   தி.மு. கழகச் செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் செய்தி யாளர்களிடம்  தெரிவித்தார்.  நேற்றிரவுகாவேரிமருத்துவமனை யின் வாயிலில்  செய்தியாளர்களிடம் பேசிய திமு கழகச் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,

``தலைவர் கலைஞர் அவர் களின் உடல் நிலை குறித்து  நேற்று முன்தினம் இரவு காவேரி மருத்துவமனை வெளி யிட்ட அறிக்கையின்படி அதே நிலையில் இருக்கிறது.

தற்போதும்  தலைவர் கலைஞர் அவர்களின் உடல் நிலை  சீராக உள்ளது'' எனக் குறிப்பிட்டார். மேலும்   கலைஞர் அவர்களை மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் தொடர்ந்து கண் காணித்து வருகின்றனர் எனவும் திமு கழகச் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

உடல்நலம் விசாரித்த தலைவர்கள்

இலங்கைதொழிலாளர்காங்கிரசு தலைவர் ஆறுமுகன் தொண்டைமான், அமைச்சர்கள் செந்தில் தொண்டைமான் ஆகியோர் இலங்கை அதிபர் சிறீ சேனாவின்வாழ்த்துக்கடிதத்தைதளபதி  மு.க.ஸ்டாலினிடம் அளித்து, நலம் விசாரித்தனர். எம்.ராமேஸ்வரன், இந்தி யாவிலுள்ள இலங்கை துணை அய் கமிஷனர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோரும் நேற்று முன்தினம் இரவு மருத்துவமனைக்கு வந்து  தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

நேற்றையதினம்கழகப்பொதுச்செயலாளர் பேராசிரியர், தமிழ்நாடு காங்கிரசு கட்சித் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர், ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அமைச்சர் கடம்பூர் ராஜு, செல்லூர்ராஜு, திண் டுக்கல் சீனிவாசன், பேராயர் எஸ்றா சற்குணம் முதலியோர் நேரில் வந்து கலைஞர் அவர்களின் உடல்நலம் குறித்து அறிந்து சென்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner