எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூலை 31- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர் பான விவகாரத்தில் தற்போது உள்ள தடை நீடிக்கும் என தெரிவித்த தேசிய பசுமை தீர்ப் பாயத்தின் தலைமை ஆணை யர் ஏகே.கோயல், ஆகஸ்ட் 9ஆம் தேதி இறுதி விசாரணை  நடத்தப்படும் என நேற்று உத் தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர் லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினரால் நடத் தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் படுகொலை செய்யப் பட்டனர். இதையடுத்து ஸ்டெர் லைட் ஆலைக்கு எதிராக தமிழக  அரசு தரப்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு ஆலை அதி காரப்பூர்வமாக மாவட்ட ஆட் சியர் முன்னிலையில் இழுத்து மூடப்பட்டது.தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக வேதாந்தா நிறுவனத்தின் தரப் பில் தேசிய பசுமை தீர்ப்பாயத் தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைமை ஆணையர் ஏகே.கோயல் அமர் வில் நேற்று (ஜூலை 30) விசா ரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அரிமாசுந்தரம் தனது  வாதத்தில், "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூலமாகத் தான் 80 சதவீத காப்பர் நாடு முழுவதும் அனுப்படுகிறது.

இந்த நிலை யில் ஆலை திடீரென மூடப் பட்டதால் அந்த பகுதியில் உள்ள பல ஆயிரம் பேர் வேலையை  இழந்துள்ளனர். மேலும் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது மற்றும் துப்பாக்கிச்சூடு சம்ப வம் ஆகியவை அனைத்தும் அரசியல் சார்ந்ததாகவே நாங் கள் கருதுகிறோம். இதில் ஆலை தரப்பில் எந்தவித தவறும் கிடையாது. மேலும்  ஆலைக் குள் அதிகப்படியான எரிவாயு மற்றும் 25ஆயிரம் லிட்டருக்கு மேல் சல்பரிக் அமிலம் இருப் பதால் ஆலையை பராமரிக்க வேண்டும். மேலும் ஆலை பராமரிப்பை அய்ஏஎஸ் அதி காரிகளை கொண்டு நடத்து வதாக மாநில அரசு  தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் அவர்கள் ஒன்றும் வல்லுநர்கள் கிடையாது. அத னால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் விவகா ரத்தில் தீர்ப்பாயம் இடைக்கால தடை  விதித்து பராமரிப்பு பணிக்கு அனுமதி வழங்க வேண்டும் என வாதிட்டார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சிஎஸ். வைத்தியநாதன் வாதத்தில், "ஸ்டெர்லைட் ஆலை வழக்கு விவகாரத்தில் எங்களது மெரிட் குறித்து வாதம் செய்ய கூடுத லாக 10 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும்.   முதலாவ தாக பராமரிப்பு பணி என்ற பெயரில் ஆலைக்குள் நுழைந்து விட்டு வழக்கம் போல் தங்க ளது பணியை தொடங்கி விட லாம் என ஆலை நிர்வாகம் நினைத்துள்ளது. அது கண்டிப் பாக முடியாது. ஆலைக்கு தற் போது மாநில  அரசால் வைக் கப்பட்டுள்ள சீல் நிரந்தரமான ஒன்று தான் என ஆலை நிறு வனத்திற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்து வாதிட்டார்.இதை யடுத்து இரு தரப்பு வாதங் களையும் கேட்ட தீர்பாயத்தின் தலைமை ஆணையர் உத்த ரவில், "தூத்துக்குடி ஸ்டெர் லைட் ஆலை விவகாரத்தில் பராமரிப்பு பணிக்கு தற்போது எந்தவித இடைக்கால உத்த ரவும் பிறப்பிக்க  முடியாது.  அதனால் ஆலை விவகாரத்தில் தற்போது உள்ள தடை நீடிக் கும். மேலும் வேதாந்தா நிறு வனம் தாக்கல் செய்துள்ள மனு விற்கு தமிழக அரசு அடுத்த 10 நாட்களுக்குள் பதில் மனு ஒன்றை ஆணையத்தில் தாக்கல்  செய்ய வேண்டும் என தெரிவித்த தலைமை ஆணையர் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைப்ப தாகவும், அன்றைய தினம் மேற்கண்ட வழக்கு குறித்து இறுதி விசாரணை நடத்தப்ப டும் என நேற்று  உத்தரவிட்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner