எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 31- தமிழகத் தில் 10 கோடி செலவில் 18 புதிய ஆரம்ப சுகாதார நிலை யங்கள் அமைக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும், குறிப்பாக ஊரகப் பகுதிகளில், சுகாதார வசதி இல்லாத கிரா மங்களுக்கு அடிப்படை மருத் துவ வசதிகளை ஏற்படுத்தித் தர தமிழக அரசு முடிவு செய் துள்ளது. அந்த அடிப்படையில், சுமார் ரூ.60 லட்சம் செலவில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் வீதம் 18 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் படி  சூசைபுரம் (ஈரோடு), கடம் பூர் (ஈரோடு), ஓசூர்  (ஈரோடு), சோலக்காடு (நாமக்கல்), உப் பிலிபாளையம் (திருப்பூர்), வெள்ளிரவல்லி (திருப்பூர்), சுவாமி மலை (தஞ்சாவூர்), காத்திருப்பு (நாகை), பக்கநாடு (சேலம்), தேனூர்பட்டி (நாமக் கல்), சமயபுரம் (திருச்சி), அவிக்கால்பட்டி (திருச்சி),  ஆவூர் (புதுக்கோட்டை), கூச்ச னூர் (தேனி), கீழ கொடுங்கலூர் (திருவண்ணாமலை), சந்தவா சல் (திருவண்ணாமலை), தொள்ளார் (கடலூர்), மனம்தவிழ்ந்த புத்தூர் (கடலூர்) ஆகிய 18 இடங்களில் புதிய ஆரம்ப சுகா தார நிலையங்கள் அமைந்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, பொதுப்பணித் துறை சார்பில் கட்டுமான பணி கள் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த நிலையில், தற்போது, ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய் வதற்கான டெண்டர் விடப் பட்டுள்ளது. அடுத்த மாதம் ஒப்பந்த நிறுவனம் இறுதி செய்யப்பட்டு செப்டம்பர் முதல் பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்து. இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டுமான பணிகளை 6 மாதங் களுக்கு முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது  என்று பொதுப் பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner