எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 31 கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தட்டச்சர், இளநிலை உதவியா ளர் உள்ளிட்ட குரூப் 4 பிரிவில் காலியாக இருந்த 9,351 இடங் களுக்கு நடந்த தேர்வின் முடி வுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யத்தின் (டிஎன்பிஎஸ்சி) இணைய தளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்தத் தேர்வினை சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர். முதல்முறையாக, குரூப் 4 பிரிவுடன் கிராம நிர்வாக அலுவலர் தேர்வும் இணைத்தே நடத்தப்பட்டது.

மொத்தமுள்ள 9,351 காலியி டங்களில், தட்டச்சர் -இளநிலை உதவியாளர் இடங்கள் அதிக அளவில் இடம்பெற்றிருந்தன. இளநிலை உதவியாளர் இடங் கள் 4,301 காலியாகவும், தட்டச் சர் பணியிடங்கள் 3,463 காலி யாகவும், கிராம நிர்வாக அலு வலர் இடங்கள் 494-ம் காலியாக இருந்தன. இந்தக் காலியிடங் களை நிரப்புவதற்காக கடந்த பிப்ரவரி 11 -இல் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.

இந்தத் தேர்வினை சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். இத்தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (ஜூலை 30) வெளியிடப்பட்டன. இதற் கென தேர்வாணைய இணைய தளத்தில் சிறப்பு ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது.

10 லட்சத்துக்கும் மேற்பட் டோர் தேர்வு எழுதியுள்ளதால் அவர்கள் தங்களது முடிவினை இணையதளத்தின் வழியாக அறிய இரண்டு சர்வர்கள் அளிக் கப்பட்டுள்ளன. தேர்வர்கள் தங்களது பதிவெண்ணை உள்ளீடு செய்து மதிப்பெண்கள் மற்றும் தரவரிசைப் பட்டியல் விவரங்களை அறிந்து கொள் ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner