எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, ஜூலை 31 பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டியால் நாடு முழுவதும் 2.54 லட்சம் தொழில் நிறுவனங்கள் மூடப் பட்டுள்ளன என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர் வாகக் குழு உறுப்பினரும், கட்சியின் புதுவை மாநில மேலிட பொறுப்பாளருமான அஜீஸ் பாஷா தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர், புதுச்சேரியில் செய்தியாளர்க ளுக்கு திங்கள்கிழமை மேலும் கூறியது:

உலகிலேயே மிக அதிக அளவில் 28 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிப்பது இந்தியாவில் தான். ஆனால், பெட்ரோல், டீசலை மட்டும் ஜி.எஸ்.டி.க் குள் கொண்டு வரவில்லை. இவற்றை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால், இந்தி யாவில் பெட்ரோல் லிட்டர் ரூ.40-க்கு கிடைக்கும். பிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ். டி.யால் நாடு முழுவதும் 2.54 லட்சம் நிறுவனங்கள் மூடப் பட்டுள்ளன.

தமிழகத்தில் மட்டும் 50 ஆயிரம் நிறுவனங்கள் மூடப் பட்டுள்ளன. குறிப்பாக, திருப்பூரில் மொத்தம் இருந்த சிறு, குறு தொழில் நிறுவனங் கள் 5 ஆயிரத்தில் இருந்து 500-ஆக குறைந்துள்ளது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்கப்படும் என வாக்கு றுதி அளித்து ஆட்சிக்கு வந்த னர். ஆனால், மத்திய அரசின் செயல்பாட்டால் 90 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந் துள்ளனர் என்றார் அஜீஸ்பாஷா.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner