எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கும்பகோணம், ஜூலை 31- கும்பகோணம், தாராசுரம், எலுமிச்சங்காபாளையம், சுவாமிமலை, மாங்குடி, வலையப்பேட்டை, திருநா கேஸ்வரம், நாச்சியார்கோவில், அண்ணலக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 700 குடும்பங் கள் தலைமுறை, தலைமுறை யாக பித்தளை பாத்திரங்கள் மற்றும் பித்தளைப் பொருள் களை குடிசைத் தொழிலாக உற்பத்தி செய்து வருகின்றனர்.

தலைமுறையாக, தலை முறையாக இயந்திரப் பயன் பாடின்றி முழுக்க, முழுக்க கைகளினால் தயாரிக்கப்படுகிறது. மேலும், பழங்காலம் முதலே பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்படுவதால், கும்ப கோணம் பித்தளை பாத்திரங் களுக்கு எப்போதுமே தனி மதிப்புண்டு.

இவை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஆஸ் திரேலியா போன்ற வெளிநாடு களுக்கும் ஏற்றுமதி செய்யப் படுகின்றன.  பித்தளைப் பாத்திரங்களின் விற்பனைக்கு தமிழக அரசின் வாட் வரி 5 சதவீதமாக இருந்து வந்தது. இந்நிலையில், மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்திய சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி), பித்தளை பாத்திரங் களுக்கான 5 சதவீத வாட் வரியை 12 சதவீதமாக உயர்த்தி நிர்ணயித்தது. இதனால், கும்ப கோணம் மற்றும் சுற்றுவட்டா ரப் பகுதிகளில் பித்தளைப் பாத்திரங்கள் உற்பத்தி மற்றும் விற்பனைத் தொழிலில் சுணக்க நிலை நிலவுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner