எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி, ஜூலை 31 நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆண்டுதோறும் சுமார்  200 கல்லூரிகள் மூடிக் கொள்வதற்கு அனுமதிக்குமாறு ஏஅய்சிடிஇ யிடம் விண்ணப் பித்து வருவதாக தி டைம்ஸ் ஆப் இந்தியா (29.7.2018) ஏடு வெளியிட்டுள்ளது. இதுகுறித்த விவரம் வரு மாறு:

நாடுமுழுவதும் உள்ள 3200 பொறியியல் கல்லூரிகளில் சரி பாதி அளவு மாணவர்கள் சேர்க்கை இல்லாமல், காலி யாக இருந்து வருகின்றன. திருச்சியில் நடைபெற்ற தேசிய தொழில் நுட்ப பயிற்சி நிறுவனத்தின் 14ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு அனைத் திந்திய தொழில் நுட்பக் கல் விக்குழுவின் (ஏ.அய்.சி.டி.இ.)  தலைவர் அனில் டி சகஸ்ரபுதே  பேசியபோது,

ஆண்டுதோறும் பொறியியல் கல்லூரிகளில் 200 கல்லூரிகள் மூடிக்கொள்ள அனுமதிகோரி விண்ணப்பித்து வருகின்றன

பொறியியல் கல்வி பயில் வதில் கடந்த மூன்று ஆண்டு களாக மாணவர்களிடையே படிப்படியாக  ஆர்வம் குறைந்து காணப்பட்டு வருகிறது. பொறியியல் கல்லூரிகளை மூடிக்கொள்ள அனுமதி கோரி அதிக அளவில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலிருந்து விண்ணப் பங்கள் வருகின்றன. கல்வி பயிலும் மாணவர்களின் எண் ணிக்கை குறைவதால் கல்வி யின் தரம் குறைந்துவிடாது. ஆகவே, அதுபோன்ற கல்லூரி களில் தொழிற்கல்விகளை தொடர்வதற்கு அனுமதித்து வருகிறோம்.

பெரிய அளவிலான கட்ட மைப்புகளுடன் கிராமப்புறங் களில் உருவாக்கப்பட்ட கல் லூரிகள் தற்பொழுது மூடிக் கொள்ள விண்ணப்பித்து வரு கின்றன. கிராமப்புற மாணவர் கள் பொறியில் கல்வியை எளிதில் பெற்றிட வேண்டும் என்பதற்காகவே, அதுபோன்ற கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.  ஆனால், அனைத்து வகையிலும் வசதியாக இருக்கும் என்றும், முன்னேற வாய்ப்பு கிடைக்கும் என்றும் கருதி மாணவர்கள் நகர்ப்புறங்களிலுள்ள கல்லூரி களையே தேர்வு செய்து வருவ தால், கிராமப்புறங்களிலுள்ள பல கல்லூரிகள் மூடப்படு கின்றன என்றார்.

பொறியில் கல்லூரிகளில் பணியிலிருந்த ஆசிரியர்கள் எண்ணிக்கையில் ஆள்குறைப்பு செய்து  ஏ.அய்.சி.டி.இ ஆசிரி யர்களை நீக்கியதால்தான் இந்த நிலையா? எனும் கேள் விக்கு பதிலளித்த அனில் கூறியதாவது:

பொறியியல் கல்லூரிகளில் 15லிருந்து 20 மாணவருக்கு ஓர் ஆசிரியர் என்கிற ஆசிரியர், மாணவர் விகிதத்தை ஏஅய் சிடிஇ தளர்த்தியுள்ளது. ஆசிரி யர்கள் பணியிடங்களில் ஆள் குறைப்பு காரணமில்லை. சில கல்லூரிகளில் ஒரே ஒரு மாண வன்கூட சேரவில்லை. சில கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மோசமாக உள்ளது. இன்னும் சில கல்லூரிகளில் ஆசிரியர்களை வேறு கல்லூரி களுக்கு செல்வதை தடுக்க முடியாமல் தக்கவைத்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ளன.

ஆசிரியர்கள் நீக்கப்பட் டால், எங்களிடம் புகார் அளிக்குமாறு கோரியுள்ளோம். ஆனால், அதுபோன்று இது வரை புகார் எதுவும் வரவில்லை. ஆகவே, ஆள்குறைப்பு என்பது உண்மைக்கு மாறானது என்று குறிப்பிட்டார். பாடத்திட்ட மாற்றங்கள் குறித்து அனில் கூறுகையில், பொது நுழைவுத் தேர்வைத் தவிர, மாநிலங்களிடமிருந்து வரவேற்பு உள்ளது. நாடுமுழு வதும் ஒரே பொது நுழைவுத் தேர்வு என்பதை சில மாநி லங்கள் எதிர்க்கின்றன. பல் வேறு கல்லூரிகளில் சேர்க்கைக் காக தேவையில்லாமல் பல நுழைவுத் தேர்வுகளை எழுதுவதிலிருந்து ஒரே நுழைவுத் தேர்வு என்பது மாணவர்களை காப்பதாக இருக்கும். நீட் தேர்வு என்பதைக் குறிப்பிடாமல், அவர் மேலும் கூறுகையில், சில தேர்வுகளில் ஒத்துப்போகாத அளவுக்கு சில மாநிலங்கள் இருக்கின்றன. பொது நுழைவுத் தேர்வு மாநில அரசுகளின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை பாதிக்கச் செய்யாது. இந்த ஆண்டில் மருந்தியல் கல்லூ ரிகள் தொடங்குவதற்கு அதிகம் பேர் முன்வந்துள்ளார்கள்

இவ்வாறு அனைத்திந்திய தொழில் நுட்பக் கல்விக் குழுவின் (ஏ.அய்.சி.டி.இ.)  தலைவர் அனில் டி சகஸ்ரபுதே குறிப்பிட்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner