எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

சென்னை, ஆக.1 ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் அமைந்துள்ள அம்மா நவீன முழு உடல் பரிசோதனை மய் யத்தைப் போன்று மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், சேலம் ஆகிய இடங் களில் நவீன முழு உடல் பரிசோதனை மய்யங்கள் திறக் கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்னை மருத்துவக் கல் லூரிக்கு அடுத்தபடியாக ஓமந் தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் கடந்த ஜூன் 8-ஆம் தேதி அம்மா நவீன முழு உடல் பரிசோதனை மய்யம்‘ முதல்வர் எடப்பாடி பழனிசாமி யால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த மய்யத்தில் கடந்த 50 நாள்களில் 2,010 நபர்கள் பரி சோதனை செய்துள்ளனர்.

பரிசோதனை மேற்கொண்ட வர்களில் 177 பேருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு, 355 பேருக்கு சர்க்கரை நோய், 4 பேருக்கு இதயம் தொடர்பான நோய் பாதிப்பு, 14 பேருக்கு தைராய்டு பாதிப்பு, 23 பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் அறிகுறிகள், 17 பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அறிகுறிகள், 11 பேருக்கு பித்தப் பையில் கல் ஆகியவை கண்டறியப்பட் டுள்ளன.

மார்பகப் புற்றுநோய் அறிகுறி கண்டறியப்பட்ட பெண்ணுக்கு ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையிலேயே அறு வைச் சிகிச்சை செய்யப்பட்டுள் ளது.

இந்த மய்யத்தில் ரத்த வகை யைக் கண்டறியும் அதிநவீன கருவி ரூ.4 லட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ளது. கருவியின் செயல்பாட்டை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செவ் வாய்க்கிழமை தொடங்கி வைத் தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியது: இந்த நவீன கருவியின் மூலம் 9 நிமிடத்தில் 12 நபர்களின் ரத்தப் பிரிவுகளைக் கண்டறிய முடியும். இது போன்ற முழு உடல் பரிசோதனை மய்யங்கள் சேலம், மதுரை, கோவை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் விரைவில் தொடங்கப்படும். மேலும் படிப்படியாக இந்த மய்யங்கள் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

தமிழகம் முழுவதும் 410 அரசு மருத்துவ நிலையங்களில் அம்மா ஆரோக்கியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 41.47 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இந்தத் திட்டத்தில் 25 பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டு வருகின்றன என்றார் அவர்.

சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் நாரா யணபாபு உள்ளிட்டோர் நிகழ்ச்சி யில் பங்கேற்றனர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner