எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.1 கலைஞர் உடல்நிலை சீராகி வருகிறது என்று காவிரி மருத்துவமனை நேற்று (31.7.2018) மாலை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி மருத்துவனை நேற்று மாலை 6.30 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முன்னாள் முதல்வரும், திமுக தலைவ ருமான கலைஞர், ஜூலை 28ஆம் தேதி ரத்த அழுத்த குறைபாடு காரணமாக சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அய்சியூவில் வைத்து சிகிச்சைய ளித்த பிறகு அவரது உடல்நிலை சீரடைந்தது. ஜூலை 29ஆம் தேதி, மூச்சுவிடுவதில் ஏற் பட்ட சிரமம் காரணமாக, கலைஞர் உடல் நிலையில் சிறு பின்னடைவு ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சைகளுக்கு கலைஞர் உடல் நிலை ஒத்துழைத்ததையடுத்து, படிப்படியாக அவர் இயல்பு நிலைக்கு திரும்பினார்.

வயது காரணமாக மொத்தத்தில் அவரது ஆரோக்கியத்தில் ஏற்பட்டுள்ள நலிவு காரண மாக, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை நீட்டிக்க வேண்டியது அவசியம். கலைஞரின் கல்லீரல் செயல்பாடு, ரத்த ஓட்டம் ஆகியவை சீராக்கப்பட்டுள்ளது. கலைஞரின் உடல் உறுப்புகள் அனைத்தும் சிகிச்சைக்கு நல்ல வகையில் ஒத்துழைத்து வருகின்றன. இவ்வாறு காவிரி மருத்துவ மனை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ராகுல்காந்தி நலம் விசாரிப்பு

திமுக தலைவர் கலைஞர் அவர்களின் உடல் நலம் விசாரிக்க, நேற்று மாலை 4.15மணியளவில், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி அவர்கள், காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார். மருத்துவமனையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து, திமுக தலைவர் கலைஞர் அவர்களின் உடல்நிலை பற்றிக் கேட்டறிந்தார். மேலும், திமுக தலைவர் கலைஞர் அவர்களின் உடல் நிலை குறித்து மருத்துவர்கள் அரவிந்தன் செல்வ ராஜ், கோபால் ஆகியோரும் எடுத்துரைத்து அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து விளக்கினார்கள். இந்தச் சந்திப்பின் போது நாடாளுமன்ற திமுக குழுத்தலைவர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் ஆகியோரும் உடன் இருந்தார்கள்.

இந்தியாவின் மூத்த தலைவர்! என ராகுல் காந்தி உருக்கம்!

அதனை அடுத்து, ராகுல் அவர்களை, தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், திமுக தலைவர் கலைஞர் அவர்கள் சிகிச்சை பெறும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றார். அங்கு ராகுல் அவர்கள், திமுக தலைவர் கலைஞர் அவர்களைச் சந்தித்தார். அதனையடுத்து, ராகுல், இந்தியா வின் மூத்ததலைவர் கலைஞர் அவர்கள், விரைவில் முழு உடல் நலம் பெற்றிட எனது சார்பிலும், திருமதி சோனியா காந்தி அவர்கள் சார்பிலும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டு, வணக்கம் கூறிப் புறப்பட்டார். ராகுல் காந்தி அவர்களுடன், தமிழக காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், தமிழ்நாடு காங்கிரஸ் கட் சித்தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் ஆகியோர் வந்திருந்தனர்.

மேலும், தமிழ்நாடு காங்கிரஸ்கட்சியின் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்க பாலு, கிருஷ்ணசாமி, முன்னாள் எம்.எல். ஏ.டாக்டர் செல்லக்குமார், சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் இராமசாமி, முன்னாள் எம்.பி.க்கள் ஜெ.எம். ஆரூண், காஞ்சிபுரம் விஸ்வநாதன், மாணிக் தாகூர் மற்றும் கராத்தே தியாகராஜன், செல்வப் பெருந்தகை, இதாயத்துல்லா உள்ளிட்டோ ரும் வந்தனர்.

மலேசிய அரசின் பிரதிநிதிகள் நலம் விசாரித்தனர்!

நேற்றைய தினம் காலையில் மருத்துவ மனைக்கு மலேசியன் இந்தியன் காங்கிரசின் தலைவரும், மலேசிய மாநிலங்களவையின் தலைவருமான விக்னேஸ்வரன், மலேசிய நாட்டின் முன்னாள் அமைச்சரும், நாடாளு மன்ற உறுப்பினருமான சரவணன், மலே சியன் இந்தியக் காங்கிரசின் துணைத் தலை வரும், முன்னாள் அமைச்சருமான தேவ மணி, மலேசிய நாடாளுமன்ற ராஜ்யசபை உறுப்பினர் டி.மோகன் ஆகியோர் வந்தனர். மருத்துவமனையில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து, திமுக தலைவர் கலைஞர் அவர்களின் உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார்கள். திமுக தலைவர் கலைஞர் அவர்கள், விரைந்து உடல்நலம் பெற எங்க ளின் வாழ்த்துகள்! என அவர்கள், தளபதி அவர்களிடம் உருக்கமுடன் குறிப்பிட்டு, தளபதிக்கு `வணக்கம் கூறி,விடைபெற்றனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

டத்தோ சரவணன் பேட்டி!

அப்போது மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ சரவணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: -தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களைப் போன்று ஓர் இலக்கியவாதி யாருமில்லை. தமிழுக்காகப் பாடுபட்டவர் களிலும் அவரைப் போன்று மற்றொருவர் இல்லை. தமிழ் செம்மொழிக்காக அவர் எழுதிய செம்மொழிப்பாடலை லட்சக்கணக் கான மலேசியத் தமிழர்கள் பாடி மகிழ்ந்தனர். கலைஞர் அவர்கள் பூரணநலம் பெற வேண்டும் என்றுவாழ்த்துகிறோம்.இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

உடல்நிலை விசாரித்த தலைவர்கள்

மேலும் நேற்றைய தினம் மருத்துவ மனைக்கு வந்து, கழகச் செயல் தலைவர் அவர்களிடம், திமுக தலைவர் கலைஞர் அவர்களின் உடல்நிலை பற்றி விசாரித்துச் சென்றவர்கள் விவரம் வருமாறு: -

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர் பாளர் நடிகை குஷ்பு, மூதறிஞர் ராஜாஜியின் பேரன் சி.ஆர்.கேசவன்,காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., நாமக்கல் ஜெயக்குமார், பூர்ண லிங்கம் அய்.ஏ.எஸ்., தமிழக முன்னாள் உள்துறைச் செயலாளரும், காவல்துறை ஆணையத்தின் தலைவருமான பூர்ணலிங்கம் அய்.ஏ.எஸ். (ஓய்வு), கணேசன் அய்.ஏ.எஸ் (ஓய்வு), நக்கீரன்கோபால், கோவி.லெனின்.

திரைத்துறையினர்

நேற்று இரவு 8.45 மணியளவில் காவேரி மருத்துவமனைக்கு நடிகர் ரஜினிகாந்த் வருகை தந்தார். மருத்துவமனையில் அவர், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர் களைச் சந்தித்து, தலைவர் கலைஞர் அவர்க ளின் உடல் நலம் பற்றிக் கேட்டறிந்தார்.பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா, நடிகர்கள் விஜயகுமார், தியாகராஜன், நிழல் கள் ரவி, பிரசாந்த், பசுபதி, ரஞ்சித், உதயா, வையாபுரி, சிறீமன், பிரேம், ஹேமச்சந்திரன், திரைப்பாடகி சின்னப் பொண்ணு, தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் வேல் முருகன், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், வல்லரசு பார் வர்டு பிளாக் தலைவர் பி.என்.அம்மாவாசி, படத்தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, நடிகை அம்பிகா, டாக்டர் சொக்கலிங்கம், திருவல் லிக்கேணி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மாரித்தங்கம், கே.சி.ராஜா, உள்பட பலரும் திமுக செயல் தலைவர் அவர்களிடம் திமுக தலைவர் கலைஞர் அவர்களின் உடல் நலம் கேட்டறிந்தனர்.

முன்னதாக, நேற்று மாலையில் திமுக செயல் தலைவர் அவர்களை எக்ஸ்பிரஸ் நிறுவனங்களின் தலைவர் மனோஜ்குமார், சந்தாலியா சிறீவெங்கடேஸ்வரா தொழில் நுட்பக் கல்லூரியின் துணைத் தலைவர் டாக்டர் ஹெச்.சீனிவாசன், தமிழகஅரசின் முன் னாள் டில்லிப் பிரதிநிதிகள் நாகை அசோகன், ஆகியோரும், திமுக செயல்தலைவர் அவர் களைச் சந்தித்து, திமுக தலைவர் கலைஞர் அவர்களின் உடல் நலம் விசாரித்தறிந்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner