எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஆக 1- மதுரையில் அறநிலையத் துறையில் பிற்படுத்தப் பட்டவர் ஒருவர் அர்ச்சகர் பணியில் சேர்க்கப்பட்டிருப்பது,  திமுக தலைவர் கலைஞர் அவர்களுக்கு கிடைத்திருக் கும் வெற்றி என்றும், திராவிட இயக் கத்தின் வரலாற்றுச்சாதனை என்றும் தெரிவித்து திமுகழகச் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட் டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

திமுக தலைவர் கலைஞர் அவர்கள் தலைமை யிலான தமிழ்நாடு அரசு பிறப்பித்த, உரிய பயிற்சியைப் பெற்று, அனைத்துச் ஜாதியினரும் இந்து அற நிலையத்துறை அர்ச்சகர் ஆகலாம் என்ற உத்தரவின்படி 12 ஆண்டுகள் கழித்து இந்து அறநிலையத்துறை பராமரிக்கும் கோவிலில் பார்ப்பனர் அல்லாத ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச்சேர்ந்த அவர், மதுரை தல்லாகுளத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் அர்ச்சக ராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: -

பல்வேறு போராட்டங் களை கடந்து, மதுரையில் உள்ள கோவிலில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருப்பது, பெரியாரின் கனவை சட்டமாக்கிய திமுக தலைவர் கலைஞர் அவர்களுக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி! இது திராவிட இயக்கத்தின் வரலாற்றுச் சாதனை.

இவ்வாறு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner