எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.2 சிலை கடத்தல் வழக்குகள் அனைத்தை யும் சிபிஅய்யிடம் ஒப்படைக்க உள்ளதாக சென்னை உயர் நீதி மன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பெரும் பாலான கோயில்களில் உள்ள புராதன சிலைகளை பன்னாட்டு கடத்தல் கும்பல் கெள்ளையடித்து, வெளி நாடுகளுக்கு விற்பனை செய் துள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க கோரி, வழக்குரைஞர் யானை ராஜேந் திரன் சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கு தெடர்ந்தார்.

அதனால், தமிழகம் முழு வதும் நடந்த சிலை கடத்தல் தொடர்பான அனைத்து  வழக்கு களையும் விசாரிக்க அய்ஜி பொன்.மாணிக்கவேல் தலைமை யில் தனிப்படை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டது.

அதே போன்று திருச்சி சிறீரங்கம் கோயிலில் உள்ள, உற்சவர் சிலை மற்றும் மூலவர் சிலைகள் சேதம் அடைந்துள்ளது குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிட கோரி, ரங்கராஜ நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார்.

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, நீதி பதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு டிவிஷன் பெஞ்சை அமைத்து, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தர விட்டார்.

இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய டிவிஷன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் அர விந்த் பாண்டியன் ஆஜராகி,  சிலை கடத்தல் தொடர்பான புகார்கள், வழக்குகள் அனைத் தையும் சிபிஅய்யிடம் ஒப்ப டைக்க அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது என்றார்.

அப்போது நீதிபதிகள், இது வரை விசாரணை நடத்தி வந்த சிறப்பு புலனாய்வு குழு சரியாக செயல்படவில்லையா என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு கூடுதல் அரசு தலைமை வழக் குரைஞர், சிலை கடத்தல் தொடர்பான வழக்கு களை  விசா ரிக்கும் அய்ஜி பொன்.மாணிக்க வேல் தலைமையிலான சிறப்பு விசாரணை குழு கடந்த ஓராண் டாகியும் அரசுக்கு எந்த அறிக்கை யையும் தாக்கல் செய்யவில்லை. சிறப்பு விசா ரணைக் குழு விசாரணை நடத் தியதில் அரசுக்கு  திருப்தி இல்லை.

எனவே சிலை கடத்தல் வழக்குகள் அனைத்தையும் சிபிஅய் விசாரணை நடத்த அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது என்றார். அப்போது, மனுதாரர் வழக்குரைஞர் யானை ராஜேந் திரன் குறுக்கிட்டு, சிபிஅய் விசாரணை தொடர்பான அரசின் உத்தரவு எங்கே என்றார். அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல், அந்த உத்தரவு நீதிமன்றத்தில் விரைவில் தாக்கல்  செய்யப்படும் என தெரிவித்தார். அப்போது, வழக்குரைஞர் யானை ராஜேந் திரன், சிபிஅய் விசாரணைக்கு உத்தரவிடும் அரசின் ஆணை வந்தால், அது கொள்கை முடி வாக இருந்தாலும் அதை எதிர்த்து வழக்கு தொடர்வேன் என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு விசா ரணையை வரும் 8ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அன்று சிபிஅய் விசாரணைக்கு உத்தர விடும் அரசாணையை தாக்கல் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் சிலை கடத்த லுக்கு வாய்ப்புள்ள கேயில்களின் பட்டியல் மற்றும் இதுவரை சிலைகளை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசும் அய்.ஜி.பென்.மாணிக்க வேலும் தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்ய  வேண்டும் என உத்தரவிட்டனர்.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner