எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.2   தெண்டர்கள் யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி யுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தொண்டர்களின் உயிர் மூச்சாகத் திகழும் தலைவர் கலைஞர் உடல் நலிவுற் றிருக்கிறார் என்ற அதிர்ச்சி தாங்காமல் 21 கழகத் தோழர்கள் இறந்துள்ளார்கள் என்ற செய்தியறிந்து மன  அழுத்தத்தில் உறைந்து போயிருக்கிறேன்.

தலைவர் கலைஞர் உடல்நலக்குறைவால் ஏற்பட்டுள்ள சோகத்துடன், திமுக தொண்டர்கள் இறந்துள்ளார்கள் என்ற செய்தி என்னை மீளாத்துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. உயிரிழந்த தொண்டர்களின் மறைவிற்கு ஆழ்ந்த  இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொட்டும் மழையிலும் நனைந்து கொண்டே ‘தலைவா வா’ என்று எழுப்பிய அந்த உயிர்த்துடிப்பான உணர்ச்சி மிகு முழக்கங்கள் சிறிதும் வீண் போகவில்லை என்பதற்கு அடையாள மாக, உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு  வருகிறது என்ற நல்ல செய்தியை வெளியிட்டு, நமக்கெல்லாம் காவேரி மருத்துவ மனை நன்நம்பிக்கையைத் தந்து கொண்டிருக்கிறது.

திமுக என்ற மாபெரும் இயக்கம் ஏராளமான தியாகத் தழும்புகளை இன்முகத்தோடு ஏற்ற, தடந்தோள் கொண்ட தொண்டர்களால் தாங்கி நிற்கும் அசைக்க முடியாத கோட்டை. அந்த தொண்டர்களில் ஒருவரை இழந்தால் கூட  அந்தச் செய்தி, என் மனதை இடிபோல் வந்து தாக்குகிறது என்பதை தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவரும் உணர வேண்டும்.

அண்ணா கற்றுக் கொடுத்து, தலைவர் கலைஞர்  இன்றுவரை எந்த  நிலையிலும் தவறாது கடைப்பிடிக்கப்பட்டு வரும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தை மனதில் தாங்கி அதை வாழ்நாள் முழுதும் பின்பற்றி அண்ணா, தலைவர் கலைஞருக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.  திமுக கழகத்தினர் யாரும் தங்களின் இன்னுயிரை இழந்திடும் எவ்வித முயற்சியிலும் ஈடுபட வேண்டாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner