எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.2  திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் உள்ள 1-ஆவது அணு உலை, வரு டாந்திர பராமரிப்பு, எரி பொருள் நிரப்பும் பணி களுக்காக நேற்று (ஆகஸ்ட் 1) மூடப்பட்டது.

இதுதொடர்பாக கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குநர் டி.எஸ். சவுத்ரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கூடங்குளம் 1ஆவது அணு உலையில் வருடாந்திர பராமரிப்பு, எரிபொருள் நிரப்பும் பணிகளுக்காக ஆக.1 முதல் மூடப்படுகிறது. அதன் ஒருபகுதியாக 2ஆம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு நீராவி வெளியேற்றும் சோதனை நடைபெறவுள்ளது. சோதனையின் போது கொதிகலன் வால்வு’ திறக்கப்படும். அப்போது, வழக்கத்தை விட அதிக சப்தம் எழும். இந்தச் சோதனை பகல் நேரத்தில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner