புதுக்குடி, ஆக.2 பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம், சமூகப் பணிதுறை சார்பாக முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு பெரியார் புரா கிராமம், புதுக்குடி நரிகுறவர் காலனியில் உள்ள டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாத்தூர் சாயாவின் தொண்டு நிறுவன இயக்குனர் சி.ராபட் அவர்கள் தலைமை விகித்தார். அத தொடர்ந்து பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம் சமூக பணித்துறை, தலைவர் முனைவர் ஏ.ஆனந்த் ஜெரார்டு செபாஸ்டின் சிறப்புரையாற்றினார். டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு பற்றியும் மற்றும் அவர் வகுத்த திட்டங்கள் பற்றியும் விளக்கி கூறினார். மேலும் மாணவர்களும், இளைஞர்களும் கல்வி கற்பதன் மூலம் மட்டுமே அவர்களின் இலக்கை அடைய முடியும் என்றார். இவ்விழாவில் சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஞானராஜ், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் சமூகப் பணித்துறை மாணவ, மாணவிகளும், நரிகுறவர் காலனி குழந்தைகளும் பெரியவர்களும் கலந்துகொண்டு டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாமின் புகைப்படத்திற்கு மலர் மரியாதை செலுத்தினர்.