எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தஞ்சை, ஆக.2 தஞ்சை மாவட்ட சைல்டுலைன் நோடல் நிறுவனம் சமூகப்பணித்துறை, பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பாக தஞ்சை சரக காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு சட் டங்கள் குறித்து இரண்டு நாள் (28.07.2018  29.07.2018) பயிற்சி அளிக்கப்பட்டது.

இதற்கு தஞ்சை சரக காவல் துறை பணியிடை பயிற்சி மய்ய துணை கண்காணிப்பாளர்  ராஜேந்திரன் அவர்கள் தலைமை வகித்தார். அவர் பேசுகையில் இன்றைய சூழ்நிலையில் குழந் தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனில் அனைத்து நிலைய காவல் அதிகாரிகளும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த சட்டங்களை நன்கு அறிந்து இருக்க வேண்டும் என்றும் குழந் தைகள் சம்பந்தப்பட்ட வழக்கு கள் வரும்பொழுது அவர்களிடம் குழந்தை தோழமையோடு இருக்க வேண்டும் என்றார்.

அதனை தொடர்ந்து சைல்டு லைன் நோடல் நிறுவன தலைவர் முனைவர் ஆனந்த் ஜெரார்டு செபாஸ்டின் சிறப்புரையாற்றி னார். அவர் தமது உரையில் தஞ்சை மாவட்டத்தில் சைல்டு லைன் - 1098 திட்டம் 2011 முதல் மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறினார்.

மேலும் சைல்டுலைன் சார்பாக அனைத்து அரசு துறை களுக்கும், அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கும் மற்றும் தன்னார்வ தொண்டர்களுக்கும் குழந்தைகள் பாதுபாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக வும், அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே குழந்தைகளின் பாது காப்பையும்,  பராமரிப்பையும் முழுவதுமாக உறுதி செய்ய முடியும் என்றார். அதனையடுத்து மதுரை சட்ட கல்லூரி பேராசிரியர் முனைவர் சிவக்குமார் அவர்கள் பாலியல் வன்கொடுமையிலி ருந்து பாதுகாக்கும் சட்டம் - 2012 மற்றும் இளஞ்சிரார் நீதிச்சட்டம் பற்றி பயிற்சி அளித்தார்.

இதில் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினத்தை சார்ந்த காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த பயிற்சியை சைல்டுலைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானராஜ் அவர்கள் ஏற்பாடு செய்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner