எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை,ஆக.3- அண்ணா பல்கலைக்கழக தேர்வில் முறைகேடு நடந்ததாக பல்கலைக்கழக பேராசிரியை உமா உட்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தேர்ச்சி பெறாத மாணவர் களுக்கு மறுகூட்டலில் லஞ்சம் பெற்றுக்கொண்டு கூடுதல் மதிப்பெண் வழங்கி முறை கேடு செய்திருப்பது அம்பல மாகியுள்ளது. அண்ணா பல் கலைக்கழகத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 565 அங்கீகரிக் கப்பட்ட கல்லூரிகள் செயல் பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடை பெற்ற பருவத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் சுமார் 3 லட்சம் பேர் மறுக் கூட்டலுக்காக விண்ணப்பித் தனர். மறுக்கூட்டலில் 73 ஆயிரம் மாணவர்கள்கூடுதல் மதிப்பெண்கள் பெற்றுதேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே விடைத்தாள் திருத்திய குழுவை மாற்றி, புதிதாக பேராசிரியர் குழுவை அமைத்து மதிப்பெண் மறுமதிப்பீடு செய்யப்பட்டது. இதற்கு முன்பு விடைத்தாள் திருத்திய பேராசிரியர்கள் மெத் தனமாகச் செயல்பட்ட தாகக்கூறி, ஆயிரத்து 70 பேரா சிரியர்களுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கு விடைத் தாள்கள் திருத்தம் செய்ய தடை விதித்து அப்போதைய அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமா உத்தரவிட்டார். தற்போது அதே பேராசிரியர் உமா தான்இந்த முறைகேட்டில் முக் கியமானவராக சிக்கியுள்ளார்.

மறுக்கூட்டலுக்கு இவரால் நியமிக்கப்பட்ட உதவி பேரா சிரியர்கள் விஜயக்குமார், சிவக்குமார் மற்றும் விடைத் தாள் மதிப்பீடுசெய்தவர்கள் என மொத்தம் 10 பேர்மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துவிசாரணை மேற் கொண்டு வருகின்றனர். கூடுதல் மதிப்பெண் வழங்க மாணவர் ஒருவருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றதாகவும், போலியான விடைத்தாள்தயாரித்து மோசடி செய்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டாளராக பேரா சிரியர் உமா கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து 2018- மார்ச் மாதம் வரை செயல்பட்டு வந்தார்.

மதிப்பெண் முறைகேட்டில் லஞ்சம் பெற்ற வழக்கில் சிக்கியுள்ளதால் பணியிடை நீக்கம் செய்யப்படவுள்ளார். இதனிடையே, கோட்டூர்புரத் தில் உமாவின் வீடு, திண்டி வனத்தில் உதவிப் பேராசிரி யர்கள் விஜயகுமார், சிவகுமார் ஆகியோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புகாவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில், தேர்வுத்தாள் மதிப்பீடு செய்ததில்உள்ள குறைபாடுகள் தொடர்பான ஆவணங்களும், அசையாசொத்துக்கள் வாங்கி யதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner