எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

திருச்சி, ஆக.3 திருச்சி பெரியார் மருந் தியல் கல்லூரியில் உலக மக்கள் தொகை நாள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் 31.07.2018 அன்று காலை 11.30 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமை வகிக்க பெரியார் நலவாழ்வு சங்கத்தின் செயலர் பேராசிரியர் க. உமாதேவி வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவமனை  மற்றும் ஆராய்ச்சி மய்யத்தின் சமூக மருத்துவத் துறை பேராசிரியர் மரு. பிரபா தங்கராஜ் சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில்:

வறுமையை ஒழித்து, அனைவருக்கும் அனைத்தும் சமமாக கிடைக்க வேண்டும். அதன் மூலம் ஆரோக்கியமான சமுதாயம் உருவாக வேண்டும் என்பதனை நோக்க மாகக் கொண்டுதான் மக்கள்தொகை நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 2017ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி உலக மக்கள்தொகை 7.6 பில்லியன் இதில் சீனா 1.4 பில்லியன் மக்கள் தொகையையும் இந்தியா 1.3 பில்லியன் மக்கள்தொகை யையும் கொண்டுள்ளது. இன்னும் ஏழு வருடங்களில் சீனாவையும் மிஞ்சும் அளவிற்கு மக்கள்தொகை அதிகமான  நாடாக இந்தியா மாற இருப்பது நலவாழ் விற்கும், அடிப்படைத் தேவைகளுக்கும் மிகப்பெரிய சவாலினையும் பேராபத் தையும் கொடுக்கக்கூடியது என்றும் உரை யாற்றினார்.

மக்கள் தொகை பெருக்கத்தினால் நாட்டின் பொருளாதாரம் பெரிதளவில் பாதிக்கப்படுவதுடன், கல்வி, வேலை வாய்ப்பு, அடிப்படைத் தேவைகளில் தன்னிறைவு மற்றும் நலவாழ்வு போன் றவை கேள்விக்குறியாவதுடன் எதிர்காலத் தலைமுறைகளின் தேவைகளும், வாய்ப்புக்களும் சுரண்டப்படுகின்றன. பழைய பண்பாட்டு மூடத்தனத்தில் மூழ்கியுள்ள ஆணாதிக்கமிக்க நம்முடைய இந்திய சமுதாயத்தில் ஆண் குழந்தைகள் வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகமான பிள்ளைப் பேறுகளை சுமக்கக்கூடிய சமுதாய கட்டாயத்தில் பெண்கள்  தள்ளப் படுவதனை இன்றைய இளைய சமுதாயம்  எதிர்த்து செயல்பட வேண்டும் என்றும் குடும்ப கட்டுப்பாடு என்பதில் கல்வியறிவில்லாத  பொதுமக்கள் மருத்துவர்களை அணுகுவதை விட மருந்தாளுநர்களைதான் முதலில் சந்திக்கின்றனர்.

எனவே மருந் தியல் துறையில் உள்ள மாணவச் செல் வங்கள் அவர்களிடத்திலே சரியான விழிப் புணர்வையும், மருத்துவ சந்தேகங்களை யும், தடுப்பு முறைகளையும் தெரிவித்து ஆரோக்கியமான சமுதாயம் உருவாக பாடு பட வேண்டும் உரையாற்றி  மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம ளித்தார்.

 

இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில், துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்த இந்நிகழ்ச்சிக்கு பேராசிரியர் சு.சாமலர் நன்றியுரையாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner