எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரை, ஆக.3 மதுரை மேற்கு வட்டாட்சியர் அலு வலக வளாகப் பகுதியில் சட்ட விரோதமாக கோயில் கட்டப் படுவது குறித்து கழகப் பொறுப்பாளர்கள் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக் கும் வகையில் மனுவை வட் டாட்சியரிடம் அளித்துள்ளார்கள்.

அம்மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது:

ஒரு மதசார்பற்ற நாட்டில் மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையையும், சீர் திருத்த உணர்வையும் ஊட்ட வேண்டியது ஒவ்வொரு குடி மகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச்சட்டம் (பிரிவு 51ஏ&எச்) கூறுகிறது.

இந்திய அரசமைப்புச் சட் டத்தில் உறுதி செய்யப்பட் டுள்ள இந்தக் கடமையை இந்தியாவிலேயே இயக்க ரீதி யாக செய்துவருவது திராவிடர் கழகம் மட்டுமே.

மதுரை மேற்கு வட்டாட் சியர் அலுவலக வளாகத்தில் கட்டப்படுகின்ற கோயிலை அகற்றாவிட்டால், மதசார்பற்ற அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து போராட் டங்களை நடத்த வேண்டியதாக இருக்கும் என்று அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு அலுவலக வளா கங்களில்  மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக்கூடாது என்னும் தமிழக அரசின் ஆணை (18.8.1994) நகல் மற்றும் அரசு அலுவலகங்களில் மத வழிபாட்டுத்தலங்களை அமைக்கக்கூடாது என்னும் அரசின் நடவடிக்கையை அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் (மதுரைக்கிளை) ஆணை (17.3.2010) நகலையும் இணைத்து மனுவை  மதுரை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் எஸ்.முனியசாமி தலைமையில்,  மதுரை மண்டல தலைவர் மா. பவுன் ராசா, மண்டல செயலாளர் நா. முருகேசன், பகுதி செயலாளர் (மதுரை மேற்கு) சோ. சுப் பையா, பகுதி செயலாளர் (மதுரை கிழக்கு) இரா. சுரேஷ், விராட்டிபத்து அய்யாச்சாமி, வடக்கு மாசி வீதி போட்டோ இராதா ஆகியோர் மதுரை மேற்கு  வட்டாட்சியரிடம் அளித்தார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner