எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜெர்மனி நாட்டு பெரியார் பன்னாட்டு மய்யத்தின் தலைவர் பேராசிரியை முனைவர் உல்ரிக் நிக்லஸ் சென்னை - பெரியார் திடலுக்கு வருகை தந்து தமிழர் தலைவரைச் சந்தித்தார். அண்மையில் அவர் அமெரிக்க நாட்டுக்குச் சென்று வந்ததையும், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பெரியார்தம் கொள்கைகளை பரப்புரை செய்ததையும் தமிழர் தலைவரிடம் விரிவாக எடுத்துக் கூறினார். வருகின்ற செப்டம்பர் மாதத்தில் ஜெர்மனியிலிருந்து பெரியார் சிந்தனைப் பயிற்சிக்கு மாணவிகளை அழைத்து வருவது பற்றியும், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தில் பெரியார் சிந்தனைகள் பற்றி பயிற்சி அளிக்க வேண்டும் என்ற திட்டத்தினையும் தமிழர் தலைவரிடம் தெரிவித்தும் ஒப்புதல் பெற்றார். மேலும் 'பெண் ஏன் அடிமையானாள்?' புத்தகத்தை ஜெர்மனியில் மொழி மாற்றம் செய்திடும் பணியினைப் பற்றியும் எடுத்துச் சொன்னார்.

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner