எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.4  காணொலிகள், திரைப் படங்களைப் பார்த்து பிரசவம் பார்ப்பது கடும் தண்டனைக்குரிய குற்றம் என்று பொது சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

‘யூ-டியூப்’ காணொலிகளைப் பார்த்து பெண் ஒருவருக்கு வீட்டிலேயே கணவர் பிரசவம் பார்த்ததால் திருப்பூர் மாவட் டத்தைச் சேர்ந்த கிருத்திகா என்ற கர்ப்பிணி அண்மையில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து வீட்டில் பிரசவம் பார்க்கும் செயல்களைத் தடுக்கும் வகையில் தமிழக சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது.

இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மருத்துவமனைகளில் பிரசவம் பார்த்துக் கொள்வது மட்டுமே தாய் மற்றும் சேயின் நலத்துக்கு பாதுகாப்பானது. தமிழகத்தில் அனைத்துப் பிரசவங்களுமே மருத்துவ மனையில் தான் நிகழ்கின்றன. இதில் 70 சதவீத பிரசவங்கள் அரசு மருத்துவமனை களில் நடைபெறுகின்றன.

கர்ப்பிணிகளுக்கு பேறுகால கவனிப்பு வழங்க எம்.பி.பி.எஸ். படித்த மருத்து வர்கள், செவிலிய கவுன்சிலால் அங்கீ கரிக்கப்பட்ட மகப்பேறு பயிற்சி பெற்ற செவிலியர்கள் மற்றும் கிராமப்புற சுகாதார செவிலியர்கள் மட்டுமே தகுதி பெற்ற வர்கள்.

காணொலிகளைப் பார்த்தோ, திரைப் படங்களைப் பார்த்தோ பிரசவம் பார்க் காலம் என்பது அறிவார்ந்த செயல் அல்ல. கர்ப்பிணிகளுக்கு ஊறு விளைவிக்கும் இத்தகைய செயல்கள் தண்டனைக்குரியது.

கணவனையும் குடும்பத்தாரையும் சார்ந்திருக்கும் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ சேவை தேவைப்படும்போது அது கிடைக் காமல் தடுப்பது இந்தியத் தண்டனை சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்ற மாகும். மேலும் தாய்-சேய் நலன் காக்கும் கடைமையை நிறைவேற்ற விடாமல் அரசு மருத்துவரையோ, கிராமப்புற மற்றும் நகர்ப்புற செவிலியர்களையோ பிற அலு வலர்களையோ கடமையாற்ற விடாமல் தடுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதுபோன்ற செயல்களில் யாராவது ஈடுபட்டால் உடனடியாக 102, 104 மற்றும் பொது சுகாதாரத் துறையின் 94443 40496, 044 - 24350496, 24334811 ஆகிய எண்களில் 24 மணி நேரமும் பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம்.

24 மணி நேரமும் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தாய்- சேய் நல சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner