எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.4 தமிழகத்தில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 17 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற் படுவதாகவும், இதைக் குறைக் கும் நோக்கில் மாநிலம் முழு வதிலும் 14 இடங்களில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகளில் “தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை திட்டம்‘ தொடங்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஊரக சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர்  யாஸ்மின் தெரிவித்தார்.

சாலை விபத்து உயிரிழப்பு களைத் தடுக்கும் நோக்கில் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் “தமிழ்நாடு விபத்து மற்றும் அவசரக் கால சிகிச்சை திட்டம்‘ வெள்ளிக் கிழமை தொடங்கப்பட்டது.

இந்த விழாவில் மாவட்ட ஊரக சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர்  யாஸ்மின் பேசிய தாவது:

சாலை விபத்துகளில் ஏற் படும் உயிரிழப்புகளைக் குறைக்க நவீன மருத்துவக் கருவிகள் உள்ளிட்ட மேம்பட்ட வசதி களுடன் “தமிழ்நாடு விபத்து மற்றும் அவசரக் கால சிகிச்சை திட்டம்‘ செயல்படுத்தப்படும் என்று பேரவையில் கடந்த ஜூன் மாதம் 25-ஆம் தேதி நடந்த சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி தமிழக மருத்துப் பணிகள் துறை இயக்குநர் தாரேஷ் அகமத் வழிகாட்டுதலின் படி, முதல்முறையாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இத்திட்டம் அண்மையில் செயல்படுத்தப் பட்டது. இதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் 14 இடங் களில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அரசு  மருத்துவ மனைகளில் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை திட்டத்தை  செயல்படுத்த அறி வுத்தப்பட்டுள்ளது.

அதன்பேரில், வாலாஜா பேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இத்திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது. இத்திட்டம் ஆம்பூ ரிலும் விரைவில் செயல்படுத்தப் பட உள்ளது.

சாலை விபத்துகள், மார டைப்பு, தீக்காயம், விஷம் குடித்தல் உள்ளிட்ட மிகவும் ஆபத்தான, இறக்கும் தருவாயில் உயிருக்குப் போராடும் நிலையில் வருவோரைக் காப்பாற்ற இத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரமும் மருத் துவர், செவிலியர் பணியில் இருப்பார்கள்.

தமிழகத்தில் சாலை விபத்து களில் ஆண்டுக்கு 17 ஆயிரம் பேர் இறப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இத்திட்டத்தின் மூலம் இனிவரும் காலங்களில் உயிரிழப்புகள் குறைய வாய்ப் புள்ளது என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner