எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக. 4 புதிய தலைமை செயலகக் கட்டடம் கட்டியதில் முறைகேடு நடை பெற்றது குறித்து விசாரணை நடத்தஅமைக்கப்பட்ட நீதிபதி ரகுபதி ஆணையத்தை சென்னை உயர்நீதிமன்றம் கலைத்து உத்தரவிட்டது.

கடந்த 2007 ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்காலத்தில் சென்னை அண்ணா சாலையிலுள்ள ஓமந் தூரார் அரசு அலுவலக வளாகத்தில் புதிய சட்டமன்றக் கட்டிடம் கட் டப்பட்டது. புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடு நடைபெற்றதாகக்கூறி அது குறித்து விசாரணை நடத்த 2012 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக் காலத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தை எதிர்த்தும், ஆணையம் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரியும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 2015-ஆம் ஆண்டு ரகுபதி ஆணைய விசா ரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இதனால் 3 ஆண்டு களாக ரகுபதி ஆணையம் செயல் படாமல் இருந்தது.

நீதிபதியின் உத்தரவின்பேரில் தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில், ரகுபதி ஆணை யத்துக்கு இது வரை 4 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ள தாகவும், உயர் நீதிமன்றம் தடைவிதித்திருந்த மூன்றாண்டு காலத்தில் 2 கோடி ரூபாய்க்கு மேல் செலவுசெய்யப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டிருந்தது. இது வீண் செலவு இல்லையா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

ஆணையத்தின் செயல் பாடுகளை அரசு கண்காணித் திருக்க வேண்டும் என்றும், இது போன்ற செயல்களை நீதிமன்றம் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

இந்த வழக்கில் வெள்ளிக் கிழமை யன்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதில், வழக்கு விசாரணையில் ரகுபதி ஆணை யத்தை கலைக்க நீதிபதி உத்தர விட்டார்.

இதுவரை ரகுபதி ஆணையம் ஆய்வு செய்துள்ள ஆவணங்களை வைத்து கைது நடவடிக்கை உள்ளிட்ட சட்ட ரீதியிலான நட வடிக்கையை மேற் கொள்ளலாம் எனவும், ஆணையத்துக்கு அளிக் கப்பட்டு வந்த வசதிகளை நிறுத் தவும் நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner