எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

சென்னை, ஆக.5 ஈரான் நாட்டில் சிக்கித் தவித்த தமிழக மீனவர்கள் 21 பேரும் சனிக் கிழமை அதிகாலை சென்னை வந்தடைந்தனர்.

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த 21 மீனவர்கள் ஈரானில் வேலை செய்து வந்தனர். இவர்கள் கடந்த 6 மாதங்களாக, ஊதியம் இல்லாமலும், சரியான தங்கும் வசதி இல்லாமலும் அவதியடைந்து வந்தனர்.

மேலும் இவர்கள் வேலை செய்யும் நிறுவனங்களின் உரிமை யாளர், அவர்களின் அடையாள அட்டைகள், கடவுச்சீட்டுகள் ஆகியவற்றை வாங்கி வைத்துக் கொண்டனர்.

இது குறித்து தகவலறிந்த அவர்களது குடும்பத்தினர், மீன வர்களை மீட்குமாறு அரசிடம் முறையிட்டனர். இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜியிடம் கோரிக்கை விடுத்தார். அதேபோல திமுக எம்.பி. கனி மொழியும், சுஷ்மா ஸ்வராஜை நேரில் சந்தித்து மீனவர்களை மீட்குமாறு வலியுறுத்தினார்.

இதையடுத்து சுஷ்மா ஸ்வராஜ் எடுத்த நடவடிக்கையின் காரணமாக, ஈரானில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 21 மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

21 மீனவர்களும், இந்திய தூதரகம் மூலம் ஈரான் நாட்டில் இருந்து விமானம் மூலம் சென் னைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். இவர்கள்  அனைவரும் சனிக்கிழமை அதிகாலை சென் னை விமான நிலையத்துக்கு வந்தனர். விமான நிலையத்தில் அரசு அதிகாரிகள், மீனவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் வரவேற் றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner