எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தேக்கடி, ஆக.5 முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கும் வகையில் பலமாகவும், பாதுகாப் பாகவும் உள்ளதாக தலைமை கண்காணிப்புக் குழுத் தலைவர் குல்சன்ராஜ் தெரிவித்தார்.

பருவகால நிலைகளின் போது முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு  குறித்து ஆய்வு நடத்த உச்சநீதிமன்றம் மத்திய தலைமை கண்காணிப்புக் குழுவை அமைத்தது.

தற்போது முல்லைப் பெரி யாறு அணையின் நீர்மட்டம் 135.95 அடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை மத்திய தலைமைக் கண் காணிப்புக் குழு தலைவரும், மத்திய நீர்வள ஆணைய முதன்மைப் பொறியாளருமான குல்சன்ராஜ் தலைமையில் தமிழக பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், கேரள நீர்வள ஆதாரத் துறை கூடுதல் செயலாளர் ஆர்.டிங்கு பிஸ்வால் ஆகியோர் பிரதான அணை, பேபி அணை, காலரி, சுரங்கம், நீர்கசிவு பகுதி உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தனர். ஆய்வுக் குழுவின ருடன் காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணி, மதுரை மண்டல பொதுப் பணித் துறை செயற்பொறியாளர் சுப்பிர மணியம், அணையின் துணைக் கோட்ட பொறியாளர் சாம்இர்வின் ஆகியோர் சென்றனர்.

அணை பலமாக உள்ளது: ஆய்வுக்கு பின்னர், குமுளி 1-ஆம் மைலில் அமைந்துள்ள தலைமை கண்காணிப்புக்குழு அலுவ லகத்தில் குல்சன்ராஜ் தலை மையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:  முல்லைப் பெரியாறு அணையில்  நீர்மட்டம் உயர்ந்து, தற்போது குறைந்து வருகிறது.  நீர்மட்ட உயரத்திற் கேற்ப அணையின் கசிவுநீரின் அளவு சரியாக உள்ளது. 142 அடி உயரம் தேக்கினால் அணையின் பலத்திற்கும், பாதுகாப்பிற்கும் எவ்வித இடையூறும் ஏற்படாது.  அணைப்பகுதிக்கு துண்டிக்கப் பட்ட மின் இணைப்பு வழங் குவது குறித்தும், தேக்கடியில் இருந்து அணைப் பகுதிக்கு தமிழக அரசின் புதிய படகு இயக்க அனுமதிப்பது குறித்தும்  இரு மாநில அரசுகள் பேச்சு வார்த்தை நடத்தும் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner