எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.5 மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் முதன்முறையாக சென்னையைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் வெள்ளிக் கிழமை கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்த முயற்சி மேற் கொள்ளப்பட்டது. உலக தாய்ப் பால் வாரத்தை முன்னிட்டு மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளியைச் சேர்ந்த 2 ஆயிரம் மாணவர்கள் ஒரே நேரத் தில் தங்கள் உடைகளில் மார்பகப் புற்றுநோயின் சின்னமான இளஞ்சிவப்பு நிற ரிப்பனை அணிந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோ.விசயராகவன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

சாதனை முயற்சி தொடர்பாக மயூரி அகாதெமியின் நிறுவனர் விஜயலட்சுமி கூறியது:

நான் இந்த அரசுப் பள்ளியின் மாணவி. நான் படித்த பள்ளிக்கு ஏதாவது கௌரவம் பெற்றுத் தர விரும்பி இந்த கின்னஸ் சாதனை முயற்சியை ஒருங்கிணைத்தேன். தமிழகத்தில் இதுவரை தனியார் பள்ளிகளே இதுபோன்ற சாதனை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அரசுப் பள்ளியில் கின்னஸ் சாதனை முயற்சி நடைபெற் றுள்ளது இதுவே முதன்முறை. எங்கள் சாதனை முயற்சியை கின்னஸ் சாதனை அமைப்பு அங்கீகரித்துள்ளது.

சாதனை விவரம் இன்னும் ஒரு மாதத்தில் கின்னஸ் புத்த கத்தில் வெளியிடப்படும் என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner