எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

தஞ்சை, வல்லம், ஆக.5 பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிகர்நிலை பல்கலைக் கழகத்தில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் 1989ஆம் ஆண்டு 1993ஆம் ஆண்டு பயின்ற பொறியியல் மாணவர்களின் சந்திப்பு நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாண வர் பொறியாளர் எஸ்.மார் கிரேட் அனேனிகா வரவேற்புரை ஆற்றினார்.

வேந்தர் உரை

இப்பல்கலைக் கழக வேந்தர் அவர்களின் காணொலி மூலம் முன்னாள் மாணவர்களிடம் உரையாற்றும் போது பழைய மாணவச் செல் வங்களாகிய ஆருயிர் செல்வங்களே உங்களை நேரில் சந்தித்து அளவளாவக்கூடிய வாய்ப் பினை இழந்திருக்கின்றேன் எனக்கு அது வருத்தம் அளிக்கிறது உங்களைபோலவே. இரண்டாம் அணியை சேர்ந்த நீங்கள் உலகம் முழுவதும் இன்றைக்கு நம்முடைய பெரி யார் மணியம்மை பல்கலைக்கழக பெரு மையை பறைசாற்றுக்கின்ற தூதுவர்களாக, கல்வி தூதுவர்களாக, பெரியாருடைய தூது வர்களாக பெரியாரின் பேரப்பிள்ளைகளாக, பெரியாரின் கொள்கைளின் வாரிசுகளாக நீங்கள் இன்று உலகம் முழுவதும் பரவி நல்ல நிலையில் மகிழ்ச்சியுடன் இருக் கின்றீர்கள் என்பதை அறிகின்ற நேரத்தில் இதைவிட மிகப்பெரிய ஊதியம், அதைவிட மிகப்பெரிய கைமாறு என்ன வேண்டும். நீங்கள் ஒவ்வொரும் சந்திக்கின்ற போது உங்களுடைய கல்லூரி விடுதி வாழ்கையில் பல்வேறு நிகழ்வுகளை நினைவுகூர்ந்து இருப்பீர்கள்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

இன்று பல்கலைக்கழகத்தை சுற்றிப் பார்த்து நீங்கள் தடம் பதித்த இடங்களெல் லாம் மாறுதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. அன்றைக்கு நீங்கள் இவ்வளவு வளர்ச்சி வசதிகளை பெறவில்லை. இன்றைய மாண வச் செல்வங்கள் இதை பெற்றிருக்கிறார்கள். இதைவிட அன்று இடவசதி குறைவு அவ்வாறு விடுதிகளில் வசதிகள் குறைவாக இருந்த போது கூட உங்கள் மகிழ்ச்சியில் உறவில், நட்பில் எந்த குறைவும் இல்லாமல் ஒரு குடும்பம் போலே இந்தக் கல்விக் குழு மத்துடன் மகிழ்ச்சியோடு பழகியது எங்கள் நினைவில் இருக்கக்கூடிய ஒன்றாகும். நீங்கள் உலகம் முழுவதும் பரவி இருக்கின் றீர்கள் என்பது உங்கள் பெற்றோர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியோ அதுபோலவே எங் களுக்கும் மகிழ்ச்சியை தருகின்றது. அறிவு ஆசான் தந்தை பெரியாரை அவருடைய 95 ஆண்டு காலம் கட்டிக்காத்த  அன்னை மணி யம்மையார் அவர்களின் அருட்கொடையால் உருவான இந்த பல்கலைக்கழகம் உலகளா விய அளவில் பற்பல நாட்டினராகவும் உருவாக்கி இருக்கிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதற்கு நீங்கள் தான் இலக்கியங்கள், அது இலக்கணம் என்றால் நீங்கள் இலக்கியங்கள் உங்களுடைய ஆற்றல் என்பது ஒவ்வொரு வகையிலும் முத்திரைப்பதிக்கக்கூடிய ஆற்றல்.

பல நாடுகளிலும் நீங்கள் சிறப்பாக பரவி இருக்கின்றீர்கள் என்று எண்ணும் போது பாராட்ட வார்த்தைகளே இல்லை. நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். பலபேர் கல்வி யாளர்கள், பொறியாளர்கள், புகழ் பெற்ற கணினி கம்பெனி, சொந்த கால்களிலேயே நாங்கள் வேலை கேட்க மாட்டோம். வேலை கொடுப்போம் என்ற நமது தத்துவத்தை செயல்படுத்தி இருக்கிறீர்கள். இப்படி ஏராளமாக ஒவ்வொருவரும் இருப்பது என்பதை அறிய எல்லையற்ற மகிழ்ச்சியடைகின்றோம். நீங்கள் எப்பொழுதும் சிறந்த வாழ்க்கையை மேற்கொண்டு வாழக்கூடிய சூழலை உரு வாக்கிக்கொண்டு வாழவேண்டும். உங்களது வாழ்க்கையில் தந்தை பெரியாருடைய தன் னம்பிக்கை, சுயமரியாதையை, எளிமையை, அன்பை பின்பற்றுங்கள். மனிதன், தானா கவும் பிறக்கவில்லை, தனக்காகவும் பிறக்க வில்லை என்ற தந்தை பெரியாரின் கொள் கையை சமுதாயத்திலே கல்வி மாற்றத்தை சமூக மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பது மிக முக்கியம். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தொண்டறம். வாழ்க்கையில் நல்லறம் என்ற உணர்வோடு என்றைக்கும் தாய்வீட்டை மறக்காதீர்கள். தாய்வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லுங்கள். எங்கள் செல்வங்களை பார்ப்பதுதான் எங் களுக்கு மகிழ்ச்சி, பெருமை எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தினார்.

 

பதிவாளர் உரை

நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சொ.ஆ.தனராஜ் அவர்கள் தனது வாழ்த்துரையில் இப்பல்லைக்கழகம் பழைய மாணவர்கள் நல்ல நிலையில் நல்ல கல்வி அறிவை பெற்றும் இருப்பது எங்க ளுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. முன்னாள் மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் வர்த்தக தூதுவர்களாகவும் மற்றும் சிற்பிகளாகவும் ஒவ்வொரு கல்வி சாலையிலும் செயல் திறன் காட்டிய அமைப்பின் ஒரு முக்கியமான மற்றும் ஒருங்கிணைந்த பகுதியாக திகழ் கிறார்கள். மேலும் அவர்கள் சிறப்பாக வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

துணைவேந்தர் உரை

துணைவேந்தர் பேரா எஸ்.வேலுசாமி அவர்கள் வாழ்த்துரையில் இன்று சிறப் பானதொரு முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக கொண் டாடப்பட்டது. பல மாணவர்கள் பலதரப் பட்ட உயர் பதவிகளில் பணிபுரிவது மிக்க மகிழ்ச்சியை தருகிறது.

உலகளாவிய அளவிற்கு உயர்த்தி.....

பெரியார் மணியம்மை பல்கலைக்கழக முன்னாள் முதல்வர் பேரா. பி.எஸ்.கோபால் சாமி அவர்கள் உரையாற்றும் போது: உலகளாவிய அளவிற்கு என்னை உயர்த்தி சென்ற எனது மாணவர்களை பாராட்டி மேலும் அவர்கள் சீருடனும், சிறப்புடனும் வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்றேன் என்று வாழ்த்துகிறேன். முன்னாள் மாணவர் ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு தாங்கள் இந்தத் துறையில் பணியாற்றுவதாகவும் தந்தை பெரியாரின் தன்னம்பிக்கை, சுயமரியாதை இவைகள் தான் தங்களது உயர்வுக்கு வழிகாட்டியதாக இருந்தன என்றும் தங்களுக்கு பேராசிரியர்கள் விடுதி காப்பாளர் மற்றும் பணியாளர்கள் முழு ஆதரவாக இருந்ததாகவும் குறிப் பிட்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக கல்விப்புல முதன்மையர் பேரா.பி.கே.சிறீவித்யா பொறியியல் துறையின் முதன்மையர் பேரா.ஆர்.ஜெயந்தி, முன்னாள் பேராசிரியர்கள் பேரா.ராதா கிருஷ்ணன், பேரா.குப்புராஜ், பேரா.ஜெய ராமன், பேரா.சுதாகர், பேரா.முத்துகுமார், பேரா.உமாமகேஸ்வரி, பேரா.வயலட் ஜுலி, பேரா.விமலா, பேரா நல்ல மகாராஜன் ஆகியோர் பங்கு பெற்றனர். பொறியாளர் ஜெயந்தி சிறீகாந்த் அனைவருக்கும் நன்றி  கூறினார். இந்நிகழ்ச்சியை முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் பேரா.த.கவிதா ஒருங்கிணைத்தார்.

நிதி வழங்கல்

பெரியார்  மணியம்மை முன்னாள் மாண வர்கள் பல்கலைக் கழக அறக்கட்டளை நிதியாக ரூபாய் மூன்று லட்சத்திற்கான காசோலையை துணைவேந்தர் அவர்களிடம் வழங்கினார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner