எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஆக.6 அண்ணா பல் கலைக்கழக தேர்வுத்தாள் மறுமதிப்பீட் டில் நடந்துள்ள மாபெரும் ஊழல் தொடர்பாக, லஞ்ச  ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணை அதிகாரியாக ஒரு மூத்த  அய்.பி.எஸ். அதிகாரியை  நியமித்து, ஊழலில் ஈடு பட்ட அனைவர் மீதும் கடும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.8.2018) வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

அண்ணா பல்கலைக்கழகத்தில் பயி லும் பொறியியல் கல்லூரி மாணவர் களின் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் மாபெரும் ஊழல் நடந்திருப்பதாக வெளிவந்துள்ள செய்தி வேதனையளிக் கிறது. மதிப்பெண் மோசடி தொடர்பாக தேர்வு  கட்டுப்பாட்டு அதிகாரி ஜி.வி.உமா உள்ளிட்ட மூன்று பேரை தற்காலிகப் பணி நீக்கம் செய்திருப்பது மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங் குவதில் புரையோடிப் போயிருக்கின்ற ஊழல் நோயை அடையாளம் காட்டியிருக்கிறது. அதுமட்டுமின்றி, பத்து பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக் குப் பதிவு செய்துள்ளதும், ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் நடைபெறும் விதவிதமான முறைகேடுகளும் அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை எப்படி சீரழிந்து  விட்டது என்பதையே உணர்த்துகிறது.

கடந்த ஆண்டு 3 லட்சத்து 2 ஆயிரத்து 380 மாணவர்கள் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டுக்காக விண்ணப்பித்துள் ளனர் என்றும் அவர்களில் 73 ஆயிரத்து 733 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் வெளிவந்துள்ள செய்திகள்  பல்கலைக்கழகத்தில் நியாயமாக தேர்வு எழுதிய மாணவர்கள் வழக்கமாக விண் ணப்பிக்கும் மறு மதிப்பீட்டின் மீது மிகப்பெரும் அய்யத்தை ஏற்படுத்தி யுள்ளது.அதிலும் குறிப்பாக, தேர்வில் தோல்வியடைந்தவர்கள் இந்த தேர்வுத் தாள் மறுமதிப்பீட்டின் மூலம் வெற்றி பெற்றுள்ளனர் என்பது அதைவிடக் கொடுமையான செய்தியாக இருக்கிறது.

தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகு மறு  மதிப்பீட்டுக்கு விண்ணப் பிப்பது அனைத்துப் பல்கலைக்கழகங் களிலும் உள்ள வழக்கமான நடை முறைதான் என்றாலும், அந்த மறு மதிப்பீட்டு முறையில் ஒரு விடைத் தாளுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு அதிக மதிப் பெண்கள் போட்டிருப்பதும், ஒரு  விடைத்தாளுக்கு 70 மதிப்பெண்கள் வரை மறுமதிப்பீட்டில் அளித்திருப் பதும் அதிர்ச்சியளிக்கிறது.ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதிலும் முறைகேடு நடைபெற் றுள்ளது என்றும், விடைத்தாள் அச் சடிப்பதில் 60  கோடி ரூபாய் ஊழல் என்றும் வரும் செய்திகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒட்டு மொத்த தேர்வு முறையின் மீதான நம்பகத் தன்மைக்கு குந்தகம் விளைவித்திருக் கிறது. ஆகவே, உலக அளவில் தரம் வாய்ந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் நன்மதிப்பை போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உயர்கல்வித் துறைக்கு இருக்கிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய் துள்ள வழக்கின் விசாரணை அதி காரியாக ஒரு மூத்த அய்.பி.எஸ் அதி காரியை நியமித்து, ஊழலில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அண்ணா  பல்கலைக்கழகத்தின் மறு மதிப்பீட்டு முறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் சீர்திருத்தங் களை பரிந்துரை செய்வதற்கு துணை வேந்தர்கள் அடங்கிய குழு ஒன்றினை அமைத்து மாணவர்களின்  எதிர்காலத் தையும், உயர்கல்வியின் தரத்தையும் பாதுகாத்திட வேண்டும் என்றும் முதல்வரை திமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner