எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

சென்னை, ஆக.7 காஷ் மீருக்கான சிறப்பு உரிமையை பறிக்கும் முயற்சியை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண் டும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: காஷ்மீர் மாநிலத்திற்கு அரசி யலமைப்புச் சட்ட உறுப்பு 370இன் படி சிறப்பு உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. அதனையொட்டி அம்மாநி லத்தில் யாருக்கு குடியுரிமை வழங்குவது என்ற அதிகாரத்தை மாநில அரசுக்கு அளிக்கும் உறுப்பு ‘35எ’ உருவாக்கப் பட்டிருக்கிறது. தற்போது உறுப்பு ‘35’எ-வை ரத்து செய்ய பாஜக ஆதரவு அமைப்பு ஒன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. முத்த லாக் பிரச்சனையில் கையாண்ட உத்தியையே பயன்படுத்தி காஷ்மீருக்கு வழங்கப்பட் டுள்ள சிறப்புரிமையை நீதி மன்றத்தின் மூலமாக பறிப்ப தற்கு செய்யப்படும் முயற் சியோ என்ற அச்சம் எழுந் துள்ளது.

எனவே, மத்திய அரசு இதில் தனது நிலையைத் தெளிவுப்படுத்த வேண்டும். காஷ்மீரின்  சிறப்புரிமையைப் பாதுகாப்போம் என்று அறி விக்க வேண்டுமென வலியுறுத் துகிறோம்.  இந்தியாவில் குடி யுரிமை பற்றிய சிறப்பு அதி காரம் நாகாலாந்து, மிசோரம் முதலான மாநிலங்களுக்கு உள்ளது. குடியரசுத் தலைவரின் அறிவிக்கையின் அடிப் படை யில் குறிப்பிட்ட ஒரு ஆண் டுக்குப் பிறகு ஒரு மாநிலத்தில் குடியேறியவர்களுக்கும் அதற்கு முன்பே அங்கே இருப் பவர்களுக்கும் இடையில் வேறுபட்ட மதிப்பை அளிக் கும் நிலை புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ளது. வழக்கு தொடுத்தவர்கள் அதையெல்லாம் எதிர்க்காமல் காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்புரிமையை மட்டும் எதிர்ப்பது முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வையே காட்டுகிறது.

காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்புரிமையை நேரடியா கவோ மறைமுகமாகவோ பறிக்கும் முயற்சியை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். அந்த அடிப்படையிலேயே உச்சநீதிமன்றத்தில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner