எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தி.மு.க. தலைவர் மானமிகு சுயமரியாதைக்காரரான மறைந்த கலைஞர் அவர்களுக்குத் தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் இன்று காலை 7.15 மணியளவில் இறுதி மரியாதை செலுத்தினார்.

ராஜாஜி ஹாலில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் கலைஞரின் உடலுக்கு மலர் வளையம் வைத்தும், கருப்புத் ஆடைப் போர்த்தியும் கலைஞர் அவர்களுடன் 75 ஆண்டு காலம் பயணித்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் வீர வணக்கம் செலுத்தினார்.

கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் பொதுச் செயலாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார், வழக்குரைஞரணித் தலைவர் த. வீரசேகரன், கழக வெளியுறவுச் செயலாளர் வீ. குமரேசன், மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், அமைப்புச் செயலாளர் பன்னீர்செல்வம், திராவிடன் நல நிதி தலைவர் டி.கே. நடராசன், பெரியார் திடல் மேலாளர்  ப. சீத்தாராமன், கபிலன் மற்றும் தோழர்கள் உடன் சென்று இறுதி மரியாதை செலுத்தினர்.

திமுக செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின், மு.க. அழகிரி, மு.க. தமிழரசு, செல்வி,  திமுக மகளிரணி செயலாளர் கவிஞர் கனிமொழி எம்.பி., அமிர்தம், துணைப் பொதுச் செயலாளர் சுப்பு லட்சுமி ஜெகதீசன் முதலியவர்களுக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொண்டார் திராவிடர் கழகத் தலைவர். கழகத் தலைவர் இன்று வெளியிட்ட அறிக்கையும் அளிக்கப்பட்டது.

நேற்று பிற்பகல் சந்திப்பு

காவேரி மருத்துவமனையில் இருந்த கலைஞர் அவர்களின் உடல் நலனை விசாரிக்க திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நேற்று (7.8.2018) பிற்பகல் 12.30 மணியளவில் காவேரி மருத்துவமனை சென்றார். துரைமுருகன், கவிஞர் கனிமொழி, ஆ. இராசா, ஜெகத்ரட்சகன், டி.ஆர். பாலு, பொன்முடி, எ.வ.வேலு ஆகியோருடன் உரையாடினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் உடன் சென்றிருந்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner