எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக. 8- சென்னை மெரினா கடற்கரையில் பெரியார் உடலை அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் எடுத்து சொல்லப்பட்டது. அத்தகு கோரிக்கை வைக்கப்படவில்லை; அரசின் கூற்று உண்மைக்கு மாறானது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நியூஸ்-18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி வருமாறு:

செய்தியாளர்: திராவிட இயக்க முன்னோடிகளில் மூத்தவர் என்று சொல்லக்கூடிய ஒருவருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கவில்லை என்று  அதை காரணம் காட்டி இவருக்கும் ஒதுக்கப்படக்கூடாது என்று கூறி, திமுக வாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தரப்பு வாதம் வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி...?

தமிழர் தலைவர்: இந்த அரசினுடைய வாதம் ஒரு தவறான, பொய்யான, புரட்டான வாதம். காரணம் என்னவென்றால், தந்தைபெரியார் அவர்கள் 1973 டிசம்பர் 24 இல் வேலூரில் மருத்துவமனையில் அவர்கள் மறைந்த பிற்பாடு, அப்போதே அன்னை மணியம்மையாரும், நாங்களும் தந்தை பெரியார் அவர்களுடைய உடலை பெரியார் திடலில்தான் அடக்கம் செய்ய வேண்டும் என்பதை முதல்வர் கலைஞரிடத்திலேயே சொல்லி, நாங்கள் முடி வெடுத்து, வேறு இடம் எங்களுக்குத் தேவையில்லை, திடலுக்குள்ளே வைக்க வேண்டும் என்று தெளிவாக சொல்லிவிட்டோம்.

ஆகவே, அவர் எடுத்துவைத்த வாதமே தவறானது. திசைதிருப்பக்கூடிய வாதம். இரண்டாவது ராஜாஜி, காமராஜர் என்று சொல்லியிருக்கிறார்கள். அதிலேகூட உண்மை இல்லை. என்னவென்று சொன்னால், ராஜாஜி அய்யங்கார் சம்பிரதாயத்துக்கு, வைஷ்ணவ சம்பிரதாயத்துக்கு ஏற்ப அவருடைய உடலை எரித்தார்கள்.

காமராசருக்கு நினைவிடம்

ராஜாஜி அவர்களுக்கு கலைஞரே தாராளமாக முன்வந்து, யாரும் கேட்காமலேயே ஒரு இடத்தை நினைவிடத்தை கட்டினார்கள்.

காமராஜரைப்பொருத்த வரையிலே அந்த இடத்தை, காந்தி மண்டபத்துக்கு பக்கத்திலே இருக்க வேண்டும் என்று அன்றைய நிலையிலே இருந்த காங்கிரசு நண்பர்கள், தேசியவாதிகள், காமராசருடைய நண்பர்கள் விரும்பினார்கள். அவர் காந்தியத் தொண்டர் என்ற காரணத்தினாலே, அந்த இடத்துக்கு நேரடியாகப்போய் அந்த இடத்தை உடனடியாக கலைஞர் அவர்கள் காமராசர் மறைந்த சில நிமிடங்களுக் குள்ளேயே நேரில் போனார். முதல்வர் கலைஞரோடு நாங் களும் சென்றோம். ஆகவே, அந்த இடத்தை இரவோடு இரவாக சரிப்படுத்தினார்கள். காரணம் காங்கிரசுகாரர்கள் விரும்பியது. காந்தி மண்டபத்துக்கு பக்கத்திலே காமராசர் இருக்க வேண்டும் என்று. எனவே, யாரும் மெரினாவைக் கேட்கவில்லை. தந்தை பெரியார் அவர்களைப் பொருத்த வரையிலும் சரி, நாங்கள் பெரியார் திடலிலேதான் வைக்க வேண்டும் என்று சொன்னோம்.

எனவே, இந்த மாதிரி புரட்டு வாதங்களை அவர்கள் வைப்பது என்பது ஒரு அரசுக்கு அழகல்ல. நாங்கள் இன்னமும

உயிரோடுதான் இருக்கிறோம். எனவே, தவறான வாதங்களை, திசைதிருப்பி சொல்லி தப்பிக்க வேண்டும் என்று நினைக்கக்கூடாது.

செய்தியாளர்: நேற்று அரசுத் தரப்பிலே இந்த இடம் ஒதுக்கீடு தொடர்பாக அறிவிப்பு வெளியானபோது, நீதிமன்ற வழக்குகளை காரணம் காட்டி ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டது. தற்பொழுது அந்த வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டிருக்கிறது என்று திமுக தரப்பிலே நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படக்கூடிய நிலையிலே வெவ்வேறு காரணங்கள் அரசு தரப்பிலே முன்வைக்கப்பட்டுள்ளதாக திமுக தரப்பிலே குற்றம் சாற்றப்படுகிறது. இதுகுறித்து....?

தமிழர் தலைவர்: இதுவும் தவறானது. திமுக அந்த வழக்குகளை வாபஸ் வாங்க வைத்திருக்கிறது என்று தவறான ஒரு கருத்தைச் சொல்லுகிறார்கள். வழக்கை வாபஸ் வாங்க திமுக செய்ததா, மற்றவையா என்பதைவிட, வழக்கு இருக்கிறதா, இல்லையா என்பதுதான் முக்கியம். நீதிபதிகளே கேட்டிருக்கிறார்கள், வழக்கில்லை. அதுமட்டுமல்ல, இவ்வள வும் சொன்ன பிற்பாடு, இவர்கள் மரபு மரபு என்கிறார்களே, என்ன மரபு? மரபை மாற்றுவது இல்லையா? மரபை மாற்றித் தானே பெரியாருக்கு அவர்கள் அரசு மரியாதை கொடுத் தார்கள், அதுமட்டுமல்ல, மரபு அடிப்படையிலே பார்க்க வேண்டுமானால், இப்போது எந்த நிலையிலே மற்றவர்களுக்கு இவர்கள் மரபை பின்பற்றுகிறார்கள்? மரபு என்பது சட்டமல்ல. நீதிமன்றம் சட்டத்தைப்பார்க்க வேண்டுமே தவிர, மரபை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. மரபுக்கு எந்தவிதமான சட்ட வலிமையும், ஆதாரமும் கிடையாது.

செய்தியாளர்: திமுக தலைவர் கலைஞருடைய இறப்புக்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந் தாலும்கூட, அவருடைய தொடர் பயணங்களிலே, அவரு டைய 80ஆண்டு கால பொது வாழ்க்கையிலே உடனிருந்தவர் நீங்கள். பல முக்கியமான தருணங்களைப் பார்த்திருக்கிறீர்கள். அவருடைய இழப்பு தமிழகம் மட்டுமல்லாமல், தேசிய அளவில் முக்கியமான இழப்பு? தவிர்க்க முடியாத இழப்பு....?

ஆக. 15இல் கொடியேற்றி முதல் அமைச்சர்களுக்கு உரிமை பெற்றுத் தந்தவர்

தமிழர் தலைவர்: மிகப்பெரிய அளவிற்கு மாநில உரிமைகளை பெற்றுத்தந்ததிலே அவர்களுடைய உழைப்பு என்பது இருக்கிறதே, அது மிகப்பெரியது என்பதற்கு அடையாளம், இன்னும் சில நாள்களிலே அடுத்த வாரத்திலே மாநில முதல்வர்கள் ஆகஸ்ட் 15 சுதந்திர நாளில் கோட்டை யிலே கொடி ஏற்றுகிறார்களே, அந்த கொடி ஏற்றும் உரிமை யைப் பெற்று தந்தவரே நம்முடைய மானமிகு சுயமரியாதைக் காரரான கலைஞர்தான்.  அவர் போராடிப்பெற்றுத்தந்த உரி மையை இந்தியா முழுமையும் இருக்கிற முதல் அமைச்சர்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். இது ஒன்றே போதும் அவருடைய உரிமைப் போரின் வெற்றிக்கு.

அதுமட்டுமல்ல, உறவுக்குக் கை கொடுப்போம், உரி மைக்குக் குரல் கொடுப்போம் என்பதை எடுத்துச்சொல்லி, இந்தியாவிலேயே அதனை எதிரொலிக்கச் செய்தார்.

இன்னுங்கேட்டடால், அய்க்கிய முற்போக்கு கூட்டணி யிலே அவருடைய அரசு இடம்பெற்ற நேரத்திலேதான், மக்கள் தொகையில் சரிபகுதியாக இருக்கக்கூடிய பெண் களுக்குச் சொத்து உரிமை, மகனுக்கு இருப்பதைப்போலவே மகளுக்கும் உண்டு என்பதை அம்பேத்கர் காலத்திலே அவர் முயற்சி செய்து, முடியவில்லை என்பதற்காக சட்ட அமைச்சர் அம்பேத்கர் ராஜினாமா செய்தார். அதை 2006இலே வெற்றிகரமாக மன்மோகன்சிங் தலைமையிலே இருந்த திமுக கூட்டணி அரசு  இருக்கிறதே அதை செய்து முடித்து, இந்தி யாவுக்கே அதை செய்து முடித்து, இந்தியாவுக்கே ஒரு பெரிய வரலாற்று சாதனைக்குக் காரணமாக இருந்தார்.

அதுமட்டுமல்ல, இந்தியாவிலேயே ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக நெருக்கடி காலத்திலே அவர்கள் குரல் கொடுத்து, பிறகு அதே அம்மையார் அவர்கள் சென்னை கடற்கரையிலே வருத்தம் தெரிவிக்கிறேன் என்று சொல்ல வைத்த பெருமையும் கலைஞர் அவர்களைச் சாரும்.

கிங்மேக்கர் கலைஞர்

எனவே, கலைஞர் அவர்கள் அகில இந்திய அளவிலே இரண்டு பிரதமர்கள் வருவதற்கும் காரணமாக இருந்தார்கள். அதேநேரத்திலே ஏன் விபிசிங் அவர்கள் பிரதமராக வந்த நேரத்திலும் சரி,  தேவகவுடா அவர்கள் பிரதமராக வந்ததற்கும் சரி,  அதற்கடுத்து குஜரால் அவர்கள் வந்ததற்கும் சரி பிரத மரை தேர்ந்தெடுக்கக்கூடிய அளவிலே அவருடைய பங்களிப்பு அந்த காலக்கட்டத்திலே தெளிவாக இருந்தது.

எனவேதான், அவரே ஒரு ‘கிங் மேக்கர்’ என்று சொல்லக் கூடிய அளவுக்கு இருந்தார்கள். அப்போது இவரைப்பார்த்து கேட்டார்கள், ஏன், நீங்களே பிரதமர் ஆகியிருக்கலாமே என்று கேட்டபோது, என் உயரம் எனக்குத் தெரியும் என்று அடக்கத்தோடு பதில் சொன்ன ஒரு தலைவர்.

அந்த வகையிலே அவர் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, அகில இந்தியாவிலுமே உரிமைகளை இணைத்து ஜனநாயகத் தைக் காப்பாற்றுவதற்கு அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் வரலாற்றுப் பெருமை வாய்ந்தது. யாராலும் மறக்க முடியாது.

செய்தியாளர்: தமிழக அரசியல் களத்திலே வரலாற்றை எடுத்துப்பார்க்குமபோது, ஒரு நாகரிகம், ஒருபரஸ்பர புரிந் துணர்வு, மாற்றுக் கொள்கை, மாற்றுக்கருத்து இருந்தாலும்கூட, திமுக தலைவர் கலைஞர் உடல் நலிவுற்ற நிலையில், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற போதும் சரி, வீட்டில் இருந்தபோதும் சரி, அவரை நேரில் போய் பார்த்தவர்கள் மாற்றுக்கட்சிக்காரர்கள்- ஆனால், இந்த விவகாரத்தைப்  பொருத்தவரைக்கும் ஏன் இந்த அளவுக்கு நிலைப்பாடு எடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது? இதற்கு வேறு ஏதேனும காரணம் இருக்கிறதா?

தமிழர் தலைவர்: இதில் முழுக்க முழுக்க, அவர்கள்தானா, அல்லது அவர்கள் மற்றவர்கள் எய்துகின்ற அம்பாக பயன்படுகிறார்களா? இதிலே டில்லியினுடைய பங்களிப்பு என்ன? என்பது ஆராய்ச்சி செய்ய வேண்டிய, புரிந்துகொள்ள வேண்டிய ஒரு செய்தி. தேவையில்லாமல், காழ்ப்புணர்ச்சி அரசியலோடு காற்றை விதைத்து இவர்கள் மீண்டும் புயலை அறுவடை செய்கின்ற நிலை இருக்கின்றது. நல்ல அளவுக்கு திராவிட இயக்கத்தில் பெருமை பெற வேண்டியவர்கள், சிறுமையின் அடித்தளத்திற்கு போய்விட்டார்கள். வாதங்களை வைப்பதன்மூலம் இதில் காலங்காலத்திற்கு அதிமுகவுக்கு அழிக்க முடியாத பழி என்பதை திராவிட இயக்கத்தின் தாய்க்கழகம் அவர்களுக்கு சுட்டிக்காட்டி வலியுறுத்துகிறது. இனிமேலும் தாங்கள் இந்த நிலையை எடுக்கக்கூடாது. வற்புறுத்தக்கூடாது. இது ஒருநாள் விவகாரமாக ஆகாது. இது சரித்திரத்திலே கறைபடிந்த ஒன்று. திராவிடர் இயக்கத்திலே குறிப்பாக அதிமுகவிலே. எனவே, யார் இதற்குக் காரணமோ, யார் இந்த அறிக்கைக்கு காரணமோ, யார் இந்த நிலைப் பாட்டுக்கு காரணமோ அவர்களும் சேர்ந்து கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

இவ்வாறு நியூஸ் 18 தமிழ் தொலைக்காட்சிக்கு தமிழர் தலைவர் அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner