எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் கலைஞர் அவர்களின் மறைவையொட்டி, செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட் டுள்ள மடல் விவரம் பின்வருமாறு:

ஒரே ஒருமுறை இப்போதாவது அப்பா என அழைத்து கொள்ளட்டுமா தலைவரே!

எங்கு சென்றாலும் சொல்லி விட்டுச் செல்லும் எனது ஆருயிர்த்தலைவரே, இம்முறை ஏன் சொல்லாமல் சென்றீர்கள்?

என் உணர்வில், உடலில், ரத்தத்தில், சிந்த னையில், இதயத்தில் இரண்டறக் கலந்து விட்ட தலைவா! எங்களையெல்லாம் இங்கேயே ஏங்கவிட்டு எங்கே சென்றீர்கள்?

“ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்” என்று உங்கள் நினை விடத்தில் எழுதவேண்டும் என்று 33 ஆண்டு களுக்கு முன்பே எழுதினீர்கள்.  இந்தத் தமிழ்ச் சமூகத்துக்காக இடையறாது உழைத்தது போதும் என்ற மனநிறைவுடன் புறப்பட்டுவிட்டீர்களா?

95 வயதில், 80ஆண்டு பொது வாழ்வுடன் சளைக்காமல் ஓடி, நாம் தாண்டிய உயரத்தை யார் தாண்டுவார்கள் பார்ப்போம் என்று போட்டி வைத்து விட்டு மறைந்து காத்திருக்கிறீர்களா?

திருவாரூர் மண்ணில் உங்கள் 95ஆவது பிறந்தநாளாம் சூன் 3 ஆம்நாள் பேசும்போது, உங்கள் சக்தியில் பாதியைத் தாருங்கள் என்றேன். அந்த சக்தியையும், பேரறிஞர் அண்ணாவிடம் நீங்கள் இரவலாகப் பெற்ற இதயத்தையும் யாசிக்கிறேன்; தருவீர்களா தலைவரே!

அந்தக் கொடையோடு, இன்னு ம்நிறைவேறாத உங்கள் கனவுகளையும் இலட்சியங்களையும் வென்றுகாட்டுவோம்!

கோடானுகோடி உடன்பிறப்புகளின்  இதயத்திலிருந்து ஒருவேண்டுகோள்.....ஒரேஒருமுறை ...

என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே! என்று சொல்லுங்கள் தலைவரே! அது ஒரு நூறாண்டு எங்களை இன-மொழி உணர்வோடு இயங்க வைத்திடுமே!

அப்பாஅப்பா என்பதை விட, தலைவரே தலைவரே என நான் உச்சரித்தது தான் என் வாழ்நாளில் அதிகம். அதனால் ஒரே ஒரு முறை, இப்போது அப்பா என்று அழைத்துக் கொள் ளட்டுமா தலைவரே?

- கண்ணீருடன்

மு.க.ஸ்டாலின்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner