எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தஞ்சை, வல்லம், ஆக.10 பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தில் (நிகர் நிலைப் பல் கலைக்கழகம்) தமிழ் நாட்டின் மேனாள் முதல்வர் மற்றும் திராவிட முன்னேற்ற கழக தலைவர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு இரங்கல் நிகழ்ச்சிக்கு 09.08.2018 அன்று நடைபெற்றது.

இரங்கல் நிகழ்ச்சிக்கு மூன்றா மாண்டு கல்வியியல் துறை மாணவி இலக்கியா,  கலைஞரின் நற்பண்புகளை எடுத்துக் கூறினார். தொடக்கவுரையாற்றிய கல்விப் புல முதன்மையர் பேரா. பி.கே.சிறீவித்யா அவர்கள் உரையாற்றும் போது: மறைந்த டாக்டர் கலைஞர் அவர்களுக்கும் பல் கலைக் கழகத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது என்றும் திராவிட பாரம் பரியத்திற்கு அவர் ஒரு எடுத்துக்காட்டாக விளங்கினார். மேலும் பெண்களுக்கு சமஉரிமை தரப்பட வேண்டும் என்று போராடி சட்டமாக இயற்றியவர்.

பெரியார் தொழில்நுட்ப வணிக காப்பகத்தின் முதன்மை செயல் அலு வலர்  உரையாற்றும் போது: சமூக விடுதலை, தமிழ்த் தொண்டு, தமிழர் களின் முன்னேற்றம் இந்திய நாட்டின் ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு கலைஞர் ஆற்றிய பெரும் அரிய பங்களிப்பினை நினைவுகூர்ந்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டதை -& 'கலைஞர் அவர்கள் மறையவில்லை; தமிழர்கள் நெஞ்சில் நிறைந்தார்' என்பதை கோடிட்டு காட் டினார்.

டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அறிவியல் அரசியல் மய்ய இயக்குநர் பேரா.பி.சபாபதி அவர்கள் உரையாற் றும் போது, கலைஞரின் பல சாதனைகளை குறிப்பிட்டார். 108 ஆம்புலன்ஸ், பிச்சைக் காரர் மறுவாழ்வு இல்லம், கண்ணொளி திட்டம், கை ரிக்சாவை ஒழித்து சைக்கிள் ரிக்சா அறிமுகப்படுத்தியது. புது முக வகுப்பு வரை இலவச கல்வி, குடிசை மாற்று வாரியம், சொத்துரிமையில் பெண் களுக்கு சமபங்கு போன்ற பல திட்டங் களை சட்டமாக்கி நடைமுறைப்படுத்தியவர்.

துணைவேந்தர் உரை: பல் கலைக்கழக துணைவேந்தர் பேரா. எஸ். வேலுசாமி அவர்கள் உரையாற்றும் போது: பெரியார் பட்டறையில் செதுக்கிய சிற்பம் அவர் என்றும் பெரியாரின் சீடர் என்றும் மேலும் பெரியார் கொள்கைளை பின்பற்றி பெரியார் கண்ட கனவுகளை நினைவாக் கினார். சட்டமன்றத்தில் வெற்றிப் பெற்ற வுடன் அறிஞர் அண்ணாவும், டாக்டர் கலைஞரும்  பெரியாருக்கு இந்த அரசை காணிக்கையாக்கிறோம் என்று கூறி னார்கள், என்பதை எடுத்துக் கூறினார்.

பல்கலைக்கழக பதிவாளர் பேரா சொ.ஆ.தனராஜ் அவர்கள் திரு மு.க. ஸ்டாலின் (செயல் தலைவர் திராவிட முன்னேற்றக்கழகம்) அவர்களுக்கு இரங் கல் செய்தி அனுப்பியதை படித்து காண் பித்தார். இந்நிகழ்வில் முதன்மையர்கள், இயக்குநர்கள், பேராசிரியர்கள் பணி யாளர்கள் மற்றும் மாணவர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.

இரங்கல் செய்தி

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான முனைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் உடல்நலக் குறைவால் 07.08.2018 அன்று மாலை இயற்கை எய்திவிட்ட செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும், துயரமும் அடைகிறோம்.

"மரணம் ஒரு நாள் என்னை சூழும் அதை நான் ஏற்பேன். ஆனால் நான் இருக்கும் வரை இந்த சமுகம் ஆதிக்க வெறியினாலும், மத வெறியினாலும் தினம் தினம் செத்து மடிவதை எதிர்ப்பேன். ஏனென்றால் நான் பெரியாரின் வளர்ப்பு" என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட அவர் தமிழகத்தில் முதல்வராக அய்ந்து முறை இருந்து தமிழகத்தை நீண்ட காலம் ஆட்சி புரிந்து பெருமைக் குரியவர்.

கலைஞர் நமக்கு கிடைத்ததற்கரிய வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும். ஒரு பகுத்தறிவாளராகவும் ஆட்சிக் கலையில் அரிய ராஜதந்திரியாகவும் நடந்துவருவதன் மூலம் தமிழர்களுக்கு புது வாழ்வு தரு பவராகிறார். நமது கலைஞர் என தந்தை பெரியாரால் அன்போடு பாராட்டப் பெற்றவர்.

அன்னாரை இழந்து வாடும் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் அளவிட முடி யாத துயரத்தை அனுபவித்து கொண்டி ருப்பதனை நாங்கள் அறிவோம். தங்கள் குடும்பத்தின் வழி காட்டியாக வாழ்ந்த மூத்த நபர் ஒருவரை இழந்த துயரத்தில் ஆழ்ந்திருக்கும் தங்களுக்கும், தங்கள் குடும் பத்தினருக்கும் இக்கல்வி நிறுவனத் தின் வேந்தர், இணைவேந்தர், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக எங்களது ஆழ்ந்த இரங்கலை மிக்க வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner