எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஆக. 11- உலகின் தலைச்சிறந்த சுவீடன் நாட்டு வீட்டு உபயோகப் பொருள் சிறு வணிக நிறுவனமான IKEA இந்தி யாவில் முதல் முதலாக அய்தரா பாத்தில் 9.8.2018 அன்று வாடிக் கையாளர்களுக்கு  தனது முதல் வணிக மய்யத்தினை திறந்து வைத்துள்ளது,

4,00,000 சதுர அடி அளவில், அய்தராபாத்தின் தொழில்நுட்ப மய்யமான பிமிஜிணிசி நகரின் நடுவில் சுமார் 13 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்துள்ள இந்த வணிக மய்யத் தில் சுமார் 7500 வகையான வீட்டு உபயோகத் தயாரிப்புகள் ஒரே கூரையின் கீழ் நுகர்வோர்களுக்கு கிடைக்கும். நாங்கள் எங்களு டைய மிக முக்கிய வணிக சந்தை யான இந்தியாவுடன் நீண்ட நாள் ஒப்பந்தத்தில் இணைந்திருக்கி றோம். இங்கு எழுச்சியூட்டுகின்ற, வாங்குவதற்கு எளிதான, வசதி யான வீட்டு உபயோகப் பொருள் களை அறிமுகம் செய்துள்ளோம் என HITEC குழுமத்தின் தலைமை செயலதிகாரி ஜெஸ்பெர் புரோ டின் தெரிவித்துள்ளார்.

விளைச்சல் சரிவால் கோதுமை விலை உயர்வு: பிரெட், பிஸ்கட் விலை உயரும்

புதுடில்லி, ஆக. 11- கோதுமை விலை உயர்வால், பிஸ்கெட் விலையை அதிகரிக்க நிறுவனங் கள் திட்டமிட்டுள்ளன. மத்திய அரசு நிர்ணயித்த இலக்குக்கு மேல் கோதுமையை கொள்ளுதல் செய்ததும் சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட காரணம் என கூறப்படு கிறது. கடந்த மாதம் கோதுமை விலை 6.3 சதவீதம் அதிகரித்து உள்ளது. இதற்கு முதல் காரணம் உற்பத்தி குறைவு என்கின்றனர்.

நடப்பு சீசனில் எதிர்பார்க்கப் பட்டதை விட 1.5 சதவீதம் கோதுமை உற்பத்தி சரிந்துள்ளது. இதனால் பிஸ்கெட், பிரெட் தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பிஸ்கெட் மற்றும் கோதுமை பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தரப்பில் கூறப்படு வதாவது:

பிஸ்கெட் தயாரிப்புக்கு முக் கிய மூலப்பொருளாக கோதுமை உள்ளது. ஆனால், கடந்த சில மாதங்களாக கோதுமை விலை அதிகரித்து வந்துள்ளது. குறிப் பாக, கடந்த மாதம் மட்டும் கோதுமை விலை 6.3 சதவீதம் உயர்ந்துள் ளது. கோதுமை விளைச்சல் இந்த ஆண்டு சீசனில் எதிர்பார்த்த அளவு இல்லை. கணிப்பை விட விளைச்சல் 1.5 சதவீதம் குறைந்து விட்டது. இதனால் சந்தைக்கு கோதுமை வரத்து சரிந்து விலை அதிகம் ஆகிவிட்டது. ஒவ்வோர் ஆண்டும் கோதுமை கொள்முத லுக்கு மத்திய அரசு இலக்கு நிர் ணயம் செய்து வருகிறது. இது போல் இந்த ஆண்டும் உணவு பாதுகாப்புக்கான கோதுமை கொள்முதல் செய்தது. ஆனால், இலக்கையும் தாண்டி கொள்முதல் செய்து விட்டது. உற்பத்தி குறைந்த நிலையில் அரசும் அதிகம் கொள் முதல் செய்து இருப்பு வைத்ததால் சந்தைக்கு வர வேண்டிய கோதுமை அளவு குறைந்தது.  உள்நாட்டு தேவைக்கு வெளி நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது.

ஆனால், இந்த முறை வெளி நாடுகளிலும் கோதுமை விலை அதிகம். அதாவது சர்வதேச சந் தையில் சுமார் 13.4 சதவீதம் அள வுக்கு கோதுமை விலை உயர்ந் துள்ளது. எனவே இறக்குமதி செய்வதும் கட்டுப்படி ஆகாது.  இந்த நிலையில், பிஸ்கெட் பிரட் உள்ளிட்ட கோதுமை பொருட்கள் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் உள்ளிட்ட தயாரிப்பு செலவு 15 முதல் 20 சதவீதம் அதிகரித்துள் ளது. இதே நிலை நீடித்தால் நடப்பு நிதியாண்டின் நான்காம் காலாண் டிலாவது பிஸ்கெட், பிரட் விலையை குறைந்த பட்சம் 4 சதவீதமாவது அதிகரிக்க வேண் டிய சூழ்நிலை உருவாகும்.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner