எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.11 ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று கலைஞர் பாராட்டிய உழைப்பு திராவிட இயக்கத்தின் லட்சியங்களை வென்று காட்டும். தமிழ்நாட்டுக்கான உரிமைகளை பெற்றுத் தரும் என்று திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கூறி யுள்ளார்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (10.8.2018) வெளியிட்ட அறிக் கையில் கூறியிருப்பதாவது:

இன்று ஆகஸ்ட் 10ஆம் தேதி, தலைவர் கலைஞரின் சாதனை வரலாற்றில் பொன் னெழுத் துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும் நாள்களில் ஒன்று. அவரது முதல் பிள்ளை யான ‘முரசொலி’ இதழ்  பிறந்த  நாள். தலைவர் கலைஞர் 17 வயதில் மாணவ நேசன் என்ற கையெழுத்து இதழை நடத் தினார். அதன் அடுத்த கட்டமாக முரசொலியைத் துண்டு வெளியீடாக முதன்முதலில் 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் நாள் தான் வெளியிட்டார். 76 ஆண்டுகள் அவரால் வளர்க்கப்பட்ட பிள்ளை இன்னமும் தமிழர்களுக்காக முரசறைந்து வருகிறது.

லட்சியத்தில் இம்மியளவும்...

தொண்டர்களைத் தட்டி எழுப்பி வருகிறது. தந்தையை இழந்து நான் நிற்பதைப் போலவே ‘முரசொலி’ என்ற மூத்த மகனும் தந்தையை இழந்து நிற்கிறான். காகிதக் கண்ணீர் வடித்து நிற்கிறது ‘முரசொலி’. "என் பொதுவாழ்வுப் பயணத்தில் இடர், துடர், இன்பம், துன்பம், எதிர்ப்பு, ஆதரவு, ஏச்சு, பேச்சு, இழிவு, பழி என எத்தனையோ விதவிதமான நிகழ்வுகளை எதிர்கொள்ளும் போது என்னை ஆளாக்கிய பெரியாரையும், அரவணைத்து வழிநடத்திய அண்ணாவை யும் நினைத்துக் கொண்டு லட்சியத்தில் இம்மியளவும் சறுக்கல் இல்லாமல் எச் சரிக்கையுடன் நடந்து கொண்டிருக்கிறேன்" என்று தலைவர் கலைஞர் எழுதினார். நமது பொது வாழ்வுப் பயணத்தில் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய மூன்று மாபெரும் சக்திகள் நம்மை வழிநடத்தும். “வரவேற்காமல் வரக்கூடிய நோய், தடுத்தாலும் கேளாமல் தழுவக் கூடிய சாவு, இவற்றுக்கு மத்தியில் மனத் தூய்மையுடனும், உறுதியுடனும் ஆற்று கின்ற செயல்கள் தான் நிலைத்து வாழக் கூடியவை"  என்று தலைவர் சொன்னார்.

இனி உணர்வால் இயக்குவார்

அவர் நம்மை விட்டுச் சென்றிருக்கலாம். ஆனால், அவர் செய்த செயல்கள், நிலைத்து வாழக் கூடியவை. தமிழ்நாட்டு மக்களை வாழவைக்கக் கூடியவை. அவர் காட்டிய வழியில், அவர் காட்டிய பாதையில் நமது பயணம் தொடரும். இதுவரை நம்மை உடலால் இயக்கியவர், இனி உணர்வால் இயக்குவார். அவர் இல்லை என்பதை என்னால் தாங்கிக் கொள்ள இயலாது. ‘இதையும் தாங்க ஏது தலைவா எமக்கு இதயம்?’ என்று கேட்கத் தோன்றுகிறது. உங்களில் ஒருவனான நான், ஏதோ ஒன்றை அல்ல; எல்லாவற்றையும் இழந்த மன நிலையில் இருக்கிறேன். அவர் கருவால் உருவானவன் நான். அவரது கதகதப்பில் தவழ்ந்தவன். அவரால் நடை பழகியவன். உடை அணிவிக்கப்பட்டவன்.

அவரால் அழைத்துச் செல்லப்பட்டு பள்ளியில் சேர்க்கப்பட்டவன். போராளி யும், சோவியத் கட்டமைப்பை உருவாக் கியவருமான ஸ்டாலின் பெயரை எனக்குச் சூட்டியவர் அவர். அவசரநிலைப் பிர கடனம் அறிவிக்கப்பட்டு, தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்ட போது காவல்துறை என்னைக் கைது செய்ய வந்தபோது, கம்பீரத்தோடு என்னை மத்திய சிறைக்கு அனுப்பி வைத்த நெஞ்சுரத்தைப் பார்த்து வளர்ந்தவன் நான். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு “நிமிடமும் என்னை வார்ப் பித்தார். வளர்த்தெடுத்தார். ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு’’ என்று மும்முறை அவர் சொன்னதுதான் எனக்குக் கிடைத்த மாபெரும் பாராட்டுப் பட்டயம்.

வென்று காட்டும்...

உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்ற அந்த மூன்று வார்த்தைகள்தான் எனக்கு அவர் விட்டுச் சென்ற அருஞ்சொற்கள். மூன்று வேளையும் என்னை இயக்கப் போகும் சாவி அதுதான். அந்த உழைப்பு, திராவிட இயக்கத்தின் இலட்சியங்களை வென்றுகாட்டும். அந்த உழைப்பு, தமிழ்நாட்டுக்கான உரிமைகளைப் பெற்றுத்தரும்.அந்த உழைப்பு, கலைஞரின் எல்லா கனவுகளையும் நிறைவேற்றும்.

மூத்த பிள்ளை ‘முரசொலி’

தி.மு.கவின் லட்சோப லட்சம் தொண் டர்கள் துணையோடு இதை சாதித்துக் காட்டுவேன் என்று சபதம் ஏற்கி றேன். ‘ஏடு’ தான் கட்சியை வளர்க்கும். ‘கட்சி’தான் ஏட்டையும் வளர்க்கும். பல நூறு இதழ்களால் வளர்க்கப்பட்டது திரா விட இயக்கம். இதனை தி.மு.க தோழர்கள் மறந்து விடக்கூடாது. உடன்பிறப்புகளுக்கு ‘முரசொலி’ வாசிப்பது மூச்சு விடுவது போன்று இயல்பானதாக மாறினால் தான் அவரின் மூத்த பிள்ளை ஆரோக்கியமாக இருப்பான். முரசொலியை வளர்ப்பது என்பது கலைஞரின் மூத்த பிள்ளையை வளர்ப்பது போல் என்று நினைத்து வளர்த்தெடுக்க வேண்டும்.

முரசொலி, அவரின் மூத்த பிள்ளை என்றால் எனக்கு மூத்த அண்ணன். தலைவர் என்ன நினைக்கிறார் என்று நேரில் பார்த்து தெரிந்து கொள்வதைவிட ‘முரசொலி’யைப் பார்த்து தெரிந்து கொள் வதே அதிகம். அவர் இல்லாத சூழ் நிலையில் நித்தமும் வெளிவரும் முர சொலியைக் காலையில் பார்க்கும் போதும் கலைஞரின் முகம்தான் நினைவுக்கு வரும். அவர் நம்மோடு இருக்கிறார், எங்கும் போய்விடவில்லை என்பதை நித்தம் உணர்த்தும் முரசொலியை வாழ்த்துகிறேன். வாழ்த்துங்கள்!

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி யுள்ளார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner