எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை நடத்திவரும் மத்திய பாஜக அரசு: அதிமுக எம்.பி. வேதனை!

சென்னை, ஆக.11 நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத்தலைவர் பதவி இடத்துக்கான தேர்தல் கடந்த 9.8.2018 அன்று நடைபெற்றது. அத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்காத அதிமுக பாஜகவை ஆதரித்துள்ளது. இதுகுறித்து தி டைம்ஸ் ஆப் இந்தியா (10.8.2018) நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

மாநிலங்களவைத் துணைத் தலைவ ராக இருந்த பி.ஜே.குரியன் 1.7.2018ஆம் நாளில் ஓய்வு பெற்றார். மாநிலங்களவை யின் 20ஆவது துணைத் தலைவராக   அரிவன்ஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  அத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாள ரும், அய்க்கிய ஜனதா தளக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய அரி வன்ஷ் நாராயண்சிங்கை ஆதரிக்குமாறு அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அதிமுக தலைமை கூறிவிட்டதால், அதி முக நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கடும் எதிர்ப்பலை ஏற்பட்டது.

ஆனந்த்குமார் சமரசம்

அதிமுக அதிருப்தி உறுப்பினரான சசிகலாபுஷ்பா உள்பட 13 பேர் அதிமுக சார்பில் மாநிலங்களவையில்  உள்ளனர். அதிமுக உறுப்பினர்களிடையே பாஜகமீது உள்ள அதிருப்தியை அறிந்த மத்திய அமைச்சர் ஆனந்தகுமார் அதிமுக அரசின் கோரிக்கைகள்குறித்து பரிசீலனை செய் வதாகவும், மத்திய அமைச்சர்களுடன் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்திட ஏற்பாடு செய்வ தாகவும் உறுதி அளித்தார்.

ஆதரிக்கக் கோரிய ராஜ்நாத் சிங்

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அதிமுக தலைமையிடம் (ஈபிஎஸ்,ஓபிஎஸ்) நேரடியாகப் பேசிய பின்னர், அதிமுக தலைமையிடமிருந்து பாஜக அணி வேட்பாளரை ஆதரித்து வாக்களிக்குமாறு அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறப்பட்டதாம்.

அதிமுக நாடாளுமன்ற மூத்த உறுப் பினர் கூறியதாவது: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சிதாராமன் சந்திக்க மறுத்தது மற்றும் சுற்றுசூழல் தூய்மைக் கான திட்டங்கள் உள்ளிட்ட நலத்திட் டங்களில் அதிமுக அரசின் கோரிக்கைகளில் அதிமுக அரசு மற்றும் மத்திய பாஜக அரசுக்கிடையே இருந்துவருகின்ற  பல் வேறு மாறுபாடுகள்குறித்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாஜகவின் சமாதானக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட் டது. அதிமுக அலுவலகத்தில் ஆனந்த குமார் நேரில் சென்று அரை மணி நேரமாக அதிகு உறுப்பினர்களின் கோரிக்கைகளைக் கேட்டு, பின்னர், பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்தும் வகையில், மத்திய அமைச்சர்களுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார் என்றார்.

மத்திய அமைச்சர்களிடம் அதிமுக அதிருப்தி

அதிமுக முகாமில் மத்திய பாஜக அரசுமீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற அதிமுக சார்பில் மத்திய அமைச்சர்களிடம்  குறிப்பாக சுற்று சூழல் மற்றும் வனத்துறை, பெட்ரோலியம், ரயில்வேத்துறை உள்ளிட்ட துறைகளில்  மத்திய அமைச்சர்களுடன் அதிமுக அரசுக்கு பெருமளவில் அதிருப்தி இருந்து வருவதாக அதிமுக நாடாளுமன்ற  உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். இறுதியில், அதிமுக உறுப்பினர்கள் பாஜக வேட்பாளரை ஆதரித்து வாக்களித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அரிவன்ஷ் நாராயண்சிங் 125 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுவ துமாக தேர்தலில் பங்கேற்காத நிலையில், காங்கிரசு கட்சியின் வேட்பாளர் பி.கே.அரிபிரசாத் 101 வாக்குகளைப் பெற்றார்.

நம்பிக்கை இல்லாத் தீர்மானம்

அண்மையில் மோடி அரசு மீது நம் பிக்கை இல்லாத் தீர்மானம் எதிர்க்கட்சி களால் கொண்டு வரப்பட்டபோது, அதிமுக வாக்களிப்பதிலிருந்து விலகியே இருக்க அதிமுக முடிவு செய்த நிலையில், பாஜக தலைவர் அமித்ஷா அதிமுக கட் சியின் ஆதரவை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கோரினார். அதனைத் தொடர்ந்து அதிமுக நிபந்தனையின்றி அத்தீர்மானத்துக்கு எதிராக  வாக்களித்தது.

மாற்றாந்தாய் மனப்பான்மை

மோடி அரசின்மீதான நம்பிக்கையில்லாத் தீர்மான விவாதத்தின்போது அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் வேணு கோபால் பேசுகையில், தமிழகம் மாற் றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப் பட்டு வருவதாகவும், தொடர்ச்சியாக மத் திய அரசால் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயக கூட்டணியின் வாக்குகள் மட்டுமல் லாமல், பாஜக அணியின் வேட்பாளருக்கு பாஜக அணியில் இடம் பெறாத அதிமுக, பிஜூ ஜனதா தளம் கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளக்கட்சியின் சார்பில் மாநிலங் களவை உறுப்பினராக உள்ள வழக் குரைஞர்  ராம்ஜெத்மலானி (இவர் 2013ஆம் ஆண்டுக்குப்பின்பு பாஜகவி லிருந்து விலகியவர்), அரியானா மாநி லத்தைச் சேர்ந்த இந்திய தேசிய லோக்தள் கட்சி உறுப்பினர்  ராம்குமார் காஷ்யப் உள்ளிட்டவர்களின் ஆதரவைப் பெற்றே பாஜக அணி வேட்பாளர் மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner