எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.11 கலைஞர் மறைவுக்குப் பின்னர் திமுக செயற்குழு அவசர கூட்டம் வருகிற 14ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. திமுக தலைவர் கலைஞர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 7ம் தேதி மாலையில் மரணம் அடைந்தார்.

இந்நிலையில் திமுக செயற்குழு அவசர கூட்டம் வருகிற 14ஆம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடக்கிறது. திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் முன்னிலை வகிக்கிறார். திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், துணை பொதுச் செய லாளர்கள் அய்.பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன். அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., ஆகிய சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

திமுக தலைவர் கலைஞர் மறைவுற்ற நிலையில் அவருக்கு இரங்கல் தெரிவிக்கவும் கட்சியின் அடுத்தகட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கவும் தீர்மானக்குழு, தணிக்கை குழு கூட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர்  க.அன்பழகன் நேற்று (10.8.2018) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 14-8-2018 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு திமுக தலைமை செயற்குழு அவசர கூட்டம் சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும். அதுபோது, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனை வரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கெள்கிறேன். கூட்டத்தில் திமுக தலைவர் கலைஞருக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner