எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.11 குழந்தைகள் நலனுக்காக தனித் துறையை உருவாக்கினால் என்ன என்று மத்திய அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் 15 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கை விசாரித்த உயர் நீதி மன்றம், குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக் கும் நபர்களுக்கு, அறுவைச் சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என கடந்த 2015-ஆம் ஆண்டு உத்தரவிட்டி ருந்தது.

இந்த உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தவில்லை. இதனையடுத்து, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி என்.கிரு பாகரன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு, வெளி நபர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் காரணமாக உள்ளனர். 7 மாதங்களாக ஒரு சிறுமியை பலர் பாலியல் கொடுமை செய்துள்ளனர். அந்தச் சிறுமியின் தாயார் என்ன செய்து கொண்டிருந்தார்? தன் மகளைக் கூட அவர் களால் கவனித்துக் கொள்ள முடியாதா? கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை குறைவின் காரணமாக பெரியவர்களின் அர வணைப்பு இல்லாமல் குழந் தைகள் வளர்கின்றனர். திருமண மானவுடன் தனிக்குடித்தனம் என்ற நிலை உருவாகிவிட்டது. இந்த முறையில் சில நன்மை களும், சில பாதிப்புகளும் இருக் கத்தான் செய்கின்றன என நீதிபதி கருத்து தெரிவித்தார்.

மேலும், ஒற்றை பெற்றோர் முறை சமுதாயத்தில் அதிகமாக உருவாகியுள்ளது. விவாகரத்து பெற்றுக் கொண்ட பின்னர், குழந்தை தாய் இல்லாமல் தந்தையிடமோ அல்லது தந்தை இல் லாமல் தாயுடனோ வாழ்வதால் மனதளவில் பாதிக்கப்படுகிறது. தாய், தந்தையுடன் குழந்தை வளர்ந்தால் தான் மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்கும் என்றார்.

குழந்தைகள் நலன் கருதி பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறையை, பெண்கள் நலத் துறை என்றும் குழந்தைகள் நலத் துறை என்றும் மத்திய அரசு இரண்டாகப் பிரித்தால் என்ன என்று கேள்வி எழுப்பினார். இது குறித்து மத்திய அரசின் கருத்தைக் கேட்டு தெரிவிக்கும்படி உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயனுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner