எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மேட்டூர், ஆக.12 கருநாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதி, கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. இதனால் உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது.

இந்த உபரிநீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருந்த தால் கடந்த ஜூலை 23-ஆம் தேதி மேட்டூர் அணை நிரம்பியது. அதற்குப் பிறகு உபரிநீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டது. பின்னர் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்தது.

நீர்வரத்துக் குறைந்த நிலை யில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீர் திறக் கப்பட்டு வந்ததால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வெள்ளிக்கிழமை காலை அணையின் நீர்மட்டம் 116.85 அடியாக இருந்தது.

இந்த நிலையில், கர்நாடக, கேரள மாநிலங்களில் மீண்டும் மழை பெய்ததால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளி லிருந்து மீண்டும் உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது. இந்த உபரிநீர் வரத்துக் காரணமாக சனிக்கிழமை (11.8.2018) பிற்பகல் 1.30 மணியளவில் மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் இரண் டாவது முறையாகவும் மேட்டூர் அணை வரலாற்றில் 40-ஆவது முறையாகவும் நிரம்பியது.

அப்போது மேட்டூர் அணை யின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 1,35,000 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து உபரிநீர் போக்கி, நீர் மின் நிலையங்கள் வழியாக நொடிக்கு 1,10,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக இருந்தது.

கடந்த 2005-ஆம் ஆண்டில் மேட்டூர் அணை 5 முறை நிரம்பி உள்ளது. 13 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு ஆண்டில் 2-ஆவது முறை யாக அணை நிரம்பி உள்ளது. 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகபட்சமாக 121.14 அடியாக இருந்தது.

அப்போது அணைக்கு 1,38,513 கனஅடி வீம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலி ருந்து அதிகபட்சமாக 1,21,455 கனஅடி தண்ணீர் வெளியேற்றப் பட்டது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் அணையின் கீழ் பகுதியில் உள்ள காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner